தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-10357

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

10357. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்னு மஸ்ஊதே!” என்று அழைத்தார்கள். நான், “இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று மூன்று தடவை கூறினேன். அப்போது அவர்கள், “ஈமானின் (இறைநம்பிக்கையின்) கயிறுகளில் மிகவும் பலமானது எது என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “அல்லாஹ்விற்காக நேசம் கொள்வதும், அல்லாஹ்விற்காகவே பகைமை கொள்வதும், அல்லாஹ்விற்காகவே நட்பு பாராட்டுவதும் ஆகும்” என்று கூறினார்கள்.

மீண்டும் அவர்கள், “இப்னு மஸ்ஊதே!” என்று அழைத்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று கூறினேன். அவர்கள், “முஃமின்களில் (இறைநம்பிக்கையாளர்களில்) சிறந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “தங்கள் மார்க்கத்தைப் புரிந்து கொண்டு, அதில் அழகிய முறையில் செயல்படுபவர்களே சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு அவர்கள், “இப்னு மஸ்ஊதே! இறைநம்பிக்கையாளர்களில் மிகுந்த அறிவுடையவர் யார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கவர்கள், “(மக்களிடையே) கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது -அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்- எவர் சத்தியத்தை (உண்மையை) மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறாரோ அவரே அறிவுடையவர். அவரின் நற்செயல்களில் குறைவு இருந்தாலும், அவர் (அமல்செய்வதில்) தவழ்ந்து ஊர்ந்து செல்பவராக இருந்தாலும் சரியே” என்று கூறினார்கள்.

தொடர்ந்து அவர்கள் கூறினார்கள்: “இப்னு மஸ்ஊதே! பனூ இஸ்ராயீலர்கள் எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர் என்பதை நீர் அறிவீரா? அவற்றில் மூன்று பிரிவினரைத் தவிர மற்றவர்கள் வெற்றி பெறவில்லை.

முதல் பிரிவினர்: அரசர்களிடமும் கொடுங்கோலர்களிடமும் ஈஸா (அலை) அவர்களின் மார்க்கத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். அதனால் அவர்கள் பிடிக்கப்பட்டு, மரம் அறுக்கும் ரம்பங்களால் அறுக்கப்பட்டார்கள்; நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். இருப்பினும் அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை (மரணம் வரை) பொறுமையுடன் இருந்தார்கள்.

இரண்டாம் பிரிவினர்: அவர்களுக்கு அநீதியை எதிர்க்கும் வலிமை இருக்கவில்லை. எனவே அவர்கள் மலைகளுக்குச் சென்று வணங்கி, துறவறம் மேற்கொண்டார்கள்.

இவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: “அவர்கள், தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள். (அல்குர்ஆன்: 57:27)

மூன்றாம் பிரிவினர்: அவர்கள் (ஈஸா-அலை- அவர்களுக்குப் பின்) என் மீது நம்பிக்கை கொண்டு என்னை உண்மைப்படுத்தினார்கள். அவர்கள் அந்த மார்க்கத்தை முறையாகப் பேணினார்கள்.

ஆனால் அவர்களில் அதிகமானோர் பாவிகளாகி விட்டனர். எவர்கள் என் மீது நம்பிக்கை கொள்ளாமல், என்னைப் பொய்ப்பித்து, இந்த மார்க்கத்தை முறையாகப் பேணவில்லையோ அவர்களையே அல்லாஹ் பாவிகள் என்று கூறுகிறான்.


حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ أَبِي حَسَّانَ الْأَنْمَاطِيُّ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنِي بُكَيْرُ بْنُ مَعْرُوفٍ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ ثَلَاثًا، قَالَ: «هَلْ تَدْرُونَ أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «الْوَلَايَةُ فِي اللهِ، وَالْحُبُّ فِي اللهِ، وَالْبُغْضُ فِي اللهِ»

قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذا عَرَفُوا دِينَهُمْ أَحْسَنُهُمْ عَمَلًا»

ثُمَّ قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ تَدْرِي أَيُّ الْمُؤْمِنِينَ أَعْلَمُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذَا اخْتَلَفُوا – وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ – أَبْصَرُهُمْ بِالْحَقِّ، وَإِنْ كَانَ فِي عَمَلِهِ تَقْصِيرٌ، وَإِنْ كَانَ يَزْحَفُ زَحْفًا»

ثُمَّ قَالَ: ” يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ عَلِمْتَ أَنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، لَمْ يَنْجُ مِنْهَا إِلَّا ثَلَاثُ فِرَقٍ، فِرْقَةٌ أَقَامَتْ فِي الْمُلُوكِ وَالْجَبَابِرَةِ، فَدَعَتْ إِلَى دِينِ عِيسَى، فَأُخِذَتْ فَقُتِلَتْ بِالْمَنَاشِيرِ، وَحُرِّقَتْ بِالنِّيرَانِ، فَصَبَرَتْ حَتَّى لَحِقَتْ بِاللهِ، ثُمَّ قَامَتْ طَائِفَةٌ أُخْرَى لَمْ تَكُنْ لَهُمْ قُوَّةٌ، وَلَمْ تُطِقِ الْقِيَامَ بِالْقِسْطَ، فَلَحِقَتْ بِالْجِبَالِ، فَتَعَبَّدَتْ وَتَرَهَّبَتْ، وَهُمُ الَّذِينَ ذَكَرَهُمُ اللهُ فَقَالَ {وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانَ اللهِ} [الحديد: 27] إِلَى {وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ} [الحديد: 16] ، وَفِرْقَةٌ مِنْهُمْ آمَنَتْ، فَهُمُ الَّذِينَ آمَنُوا وَصَدَّقُونِي، وَهُمُ الَّذِينَ رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ، وَهُمُ الَّذِينَ لَمْ يُؤْمِنُوا بِي وَلَمْ يُصَدِّقُونِي، وَلَمْ يَرْعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَهُمُ الَّذِينَ فَسَّقَهُمُ اللهُ “


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10357.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10207,
10208,
10209,
10210.



இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்-ஸுலைமான் பின் அஹ்மத்

2 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம்-அல்அன்மாதீ

3 . ஹிஷாம் பின் அம்மார்

4 . வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்

5 . புகைர் பின் மஃரூஃப்

6 . முகாதில் பின் ஹய்யான்

7 . காஸிம் பின் அப்துர்ரஹ்மான்-அல்ஹுதலீ

8 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

9 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)-இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)


الكامل في ضعفاء الرجال (2/ 204):
قَالَ الشَّيْخُ: وَبُكَيْرُ بْنُ مَعْرُوفٍ لَيْسَ بِكَثِيرِ الرِّوَايَةِ، ولَا أَعْلَمُ يَرْوِي عَنْهُ غَيْرَ الْوَلِيدِ بْنِ مسلم ومن أهل خراسان من يروي عنه غير مُحَمد بن مُزَاحِمٍ وَغَيْرُهُ، وَهو قَلِيلُ الرِّوَايَاتِ وَأَرْجُو أَنَّهُ لا بَأْسَ بِهِ وليس حديثه بالمنكر جدا.

இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகளில் புகைர் பின் மஃரூப் அறிவிக்கும் செய்தி பரவாயில்லை என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார்.

  • புகைர் குறைந்த ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவைகள் மிகவும் முன்கரானவை அல்ல. அவர் விசயத்தில் பிரச்சனை இல்லை (நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/203, 204)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார், ராவீ-9535-புகைர் பின் மஃரூஃப், ராவீ-45196-முகாதில் பின் ஹய்யான் ஆகியோர் நடுத்தரமானவர்கள் என்பதால் இது ஹஸன் தர செய்தியாகும்.

(நூல்: தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-7303, 768, 6867)


تقريب تقريب التهذيب (3/ 272):
[6867] ‌مقاتل ‌بن ‌حيان النبطي بفتح النون والموحدة أبو بسطام البلخي الخزاز بمعجمة وزاءين منقوطتين صدوق فاضل أخطأ الأزدي في زعمه أن وكيعا كذبه وانما كذب الذي بعده من السادسة مات قبيل الخمسين بأرض الهند م 4
قلت: ذكره ابن حبان في مشاهير علماء الأمصار (1566) وقال أبو داود: قلت لأحمد: ‌مقاتل ‌بن ‌حيان؟ قال ما أعلم” (سؤلات أبي داود لأحمد بن حنبل: صفحة 358) والذهبي “صدوق” ورمز له ب “صح” (ميزان الاعتدال (8739) ولم يذكر ذلك صاحب التهذيب. وأما نقل أبو الفتح الأزدي أن ابن معين ضعفه فلم أقف عليه وقد وثقه ابن معين في أكثر من رواية. وأما قول الأزدي “كان أحمد بن حنبل لا يعبأ بمقاتل بن سليمان ولا بمقاتل بن حيان” فبلا مستند وقد صرح أحمد بأنه لا يعلم حاله.

முகாதில் பின் ஹய்யான் அன்னபத்தீ, அபூபிஸ்தாம் அல்பல்கீ அல்கஸ்ஸாஸ். இவர் ‘ஸதூக்’ (உண்மையாளர்-நடுத்தரமானவர்) மற்றும் சிறந்த அறிஞருமாவார். வகீஃ அவர்கள் இவரைப் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். எனக் குறிப்பிட்டதாக அஸ்தீ கூறியிருப்பது தவறாகும்.

வகீஃ (ரஹ்) அவர்கள் இவருக்கு அடுத்து வரக்கூடிய முகாதில் பின் ஸுலைமான் எனும் நபரைத்தான் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். எனக் குறிப்பிட்டார்கள்.

இவர் ஆறாவது தலைமுறை-காலகட்டத்தைச் சேர்ந்தவர். ஹிஜ்ரி 150-க்கு முன்னதாக இந்திய மண்ணில் மரணமடைந்தார்.

இவரை பற்றிய குறிப்பை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் ‘மஷாஹீர் உலமாஇல் அம்ஸார்’ (நூல்: 1566) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் கூறுகிறார்கள்: நான் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல் அவர்களிடம் “முகாதில் பின் ஹய்யான் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவரைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை” என்று பதிலளித்தார்கள். (நூல்: ஸுஆலாத் அபூ_தாவூத்-1/358)

தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
வர்கள் இவரை ‘ஸதூக்’ என்று குறிப்பிட்டு, இவருடைய செய்திகள் ஆதாரப்பூர்வமானவை எனும் பொருளில் ‘ஸஹ்’ (صح) எனும் குறியீட்டை வழங்கியுள்ளார்கள். (நூல்: மீஸானுல் இஃதிதால்-8739). இத்தகவலை ‘தஹ்தீப்’ நூலின் ஆசிரியரான இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் குறிப்பிடவில்லை.

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியதாக அபுல் ஃபத்ஹ் அல்அஸ்தீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 374
அவர்கள் கூறியுள்ள தகவல் எனக்குக் கிடைக்கவில்லை. மாறாக, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியதாகவே பல அறிவிப்புகள் உள்ளன.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், முகாதில் பின் ஸுலைமானையும், முகாதில் பின் ஹய்யானையும் ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள்” என்று அஸ்தீ கூறிய கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஏனெனில் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களே முகாதில் பின் ஹய்யான் பற்றி தனக்குத் தெரியாது என்று மிகத் தெளிவாகக் கூறிவிட்டார்கள்.

(நூல்: தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-6867)

அபுல்ஃபத்ஹ் அஸ்தீ அவர்களே விமர்சிக்கப்பட்டவர் என்பதால் அவரின் தகவலை அறிஞர்கள் ஏற்பதில்லை.


سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها (2/ 700):
… وهذا إسناد حسن في الشواهد والمتابعات، ورجاله ثقات، وفي بعضهم
كلام لا يضر فيها.

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், இதில் இடம்பெறும் சிலரைப் பற்றி சிறிது விமர்சனம் இருந்தாலும் அது அவர்களின் தரத்தை பாதிக்கக்கூடிய விமர்சனம் அல்ல என்றும், இது ஹஸன் தர செய்தி என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-998)

மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் விமர்சனம் உள்ளது.


1 . இந்த செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • புகைர் பின் மஃரூப் ….. —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10357,


  • ஸஅக் பின் ஹஸ்ன் …. —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-376, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30443, அல்முஃஜமுல் கபீர்-10531, அல்முஃஜமுல் அவ்ஸத்-4479, அல்முஃஜமுஸ் ஸகீர்-624, ஹாகிம்-3790, குப்ரா பைஹகீ-21069,


2 . பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-18524.


3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11537.


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3992,

தப்ரானீ இமாம்-ஸுலைமான் பின் அஹ்மத்

أبو القاسم سليمان الطبراني

இறப்பு: ஹிஜ்ரி 360

தரம்: அல்ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: சுலைமான்

புனைப்பெயர்: அபூல்காஸிம், அல்ஹாஃபிழ்

பிறப்பு: ஹிஜ்ரி 260

இறப்பு: ஹிஜ்ரி 360

கால கட்டம்: பிற்கால அறிஞர்


வாழ்க்கைக் குறிப்பு

அல்ஹாஃபிழ் அபூல்காஸிம் சுலைமான் அத்தப்ரானீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 260 இல் பிறந்து ஹிஜ்ரி 360 இல் வஃபாத் ஆனார்கள். இவர் ஹதீஸ், தஃப்ஸீர், ஃபிஃக் போன்ற கலைகளில் சிறந்து விளங்கினார். இவர் ஒரு சிறந்த ஹதீஸ் கலை அறிஞர் ஆவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

வேறு பெயர்கள்: அல்ஹாஃபிழ் அபூல்காஸிம் சுலைமான் அத்தப்ரானீ, சுலைமான் அத்தப்ரானீ


ஆதாரம்: muslimscholars.info (40016) · Should verify

இஸ்ஹாக் பின் இப்ராஹீம்-அல்அன்மாதீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹிஷாம் பின் அம்மார்

هشام بن عمار بن نصير

இறப்பு: ஹிஜ்ரி 245

தரம்: நம்பகமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர் பின் மைஸரா பின் அபான்

தந்தை பெயர்: அம்மார் பின் நுஸைர்

வம்சம்: அஸ்ஸலமீ, அழ்ழஃப்ரீ

புனைப்பெயர்: அபூ அல்-வலீத்

ஊர் பெயர்: திமிஷ்க்

பயணித்த ஊர்கள்: திமிஷ்க்

பிறப்பு: ஹிஜ்ரி 153

இறப்பு: ஹிஜ்ரி 245

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஹிஷாம் பின் அம்மார் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 153 இல் பிறந்து ஹிஜ்ரி 245 இல் திமிஷ்க் நகரில் காலமானார். இவர் திமிஷ்க் பள்ளிவாசலின் சொற்பொழிவாளராக இருந்தார். மாலிக் இமாம், ஸுஃப்யான் பின் உயைனா போன்ற பல அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவரிடமிருந்து புகாரி இமாம், அபூ தாவூத், நஸாயீ, இப்னு மாஜா போன்றோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவர் நம்பகமானவர் ஆவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மாலிக் இமாம், ஸுஃப்யான் பின் உயைனா, இஸ்மாயீல் பின் அய்யாஷ், பகிய்யது பின் வலீத், ஹாதிம் பின் இஸ்மாயீல், ஹஃப்ஸ் பின் ஸுலைமான், ஸதகா பின் காலித், ஷுஐப் பின் இஸ்ஹாக், அல்வலீத் பின் முஸ்லிம், ஈஸா பின் யூனுஸ், யஹ்யா பின் ஹம்ஸா, அம்மார் பின் நுஸைர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அல்புகாரி, அபூ தாவூத், அந்நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத் பின் ஹிஷாம் பின் அம்மார், அபூ ஸுர்ஆ அத்திமிஷ்கீ, அபூ ஹாதிம், தஹ்ஹீம், முஹம்மத் பின் அவ்ஃப், யஃகூப் அல்ஃபஸவீ, பகிய்யு பின் மக்லத், ஸாலிஹ் பின் முஹம்மத்

வேறு பெயர்கள்: ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர், அபூ அல்-வலீத்


ஆதாரம்: muslimscholars.info (30288) · Should verify

வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்

الوليد بن مسلم القرشي

இறப்பு: ஹிஜ்ரி 195, தி அல்-மர்வா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: வலீத் பின் முஸ்லிம்

தந்தை பெயர்: முஸ்லிம்

வம்சம்: பனூ உமைய்யாவின் அடிமை, குரஷீ

புனைப்பெயர்: அபுல்அப்பாஸ்

ஊர் பெயர்: தமஸ்கஸ்

பயணித்த ஊர்கள்: தமஸ்கஸ், மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 119

இறப்பு: ஹிஜ்ரி 195, தி அல்-மர்வா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

வலீத் பின் முஸ்லிம் அத்தமஷ்கீ ரஹ் அவர்கள் ஷாம் பகுதியின் அறிஞரும், ஹதீஸ் கலை வல்லுநரும் ஆவார். இவர் பனூ உமைய்யாவின் அடிமையாக இருந்தார். இவர் ஹிஜ்ரி 119 இல் பிறந்து, ஹிஜ்ரி 195 இல் தி அல்-மர்வா எனும் இடத்தில் மரணமடைந்தார்.

இவர் பலமானவர் என்றாலும், தத்லீஸ் (பலவீனமான அறிவிப்பாளர்களை நீக்கி அறிவிப்பது) அதிகம் செய்பவராக இருந்தார். இவர் அல்-அவ்ஸாயீ அவர்களின் ஹதீஸ்களை நன்கு அறிந்தவராக இருந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஹுரைஸ் பின் உஸ்மான், ஸஃப்வான் பின் அம்ர், அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ, இப்னு ஜுரைஜ், முஹம்மத் பின் அஜ்லான், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபீ திஃப், ஸயீத் பின் அப்துல் அஸீஸ், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் அல்அலா, தவ்ர் பின் யஸீத், ஹன்ழலா பின் அபீ ஸுஃப்யான், ஸுஹைர் பின் முஹம்மத் அத்தமீமீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ரஹ்வாயா, அலீ பின் அல்மதீனீ, ஸுஹைர் பின் ஹர்ப், தாஊத் பின் ரஷீத், பகிய்யது பின் வலீத், ஸுலைமான் பின் அப்துர்ரஹ்மான், ஸுவைத் பின் ஸயீத், ஹாரூன் பின் அல்மஃரூஃப், ஹிஷாம் பின் அம்மார், முஹம்மத் பின் மஃரான், மஹ்மூத் பின் காலித்

வேறு பெயர்கள்: வலீத் பின் முஸ்லிம்


ஆதாரம்: muslimscholars.info (20733) · Should verify

புகைர் பின் மஃரூஃப்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முகாதில் பின் ஹய்யான்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

காஸிம் பின் அப்துர்ரஹ்மான்-அல்ஹுதலீ

القاسم بن عبد الرحمن الشامي

ஹி-112 அல்லது 118 ...


இயற்பெயர்: காஸிம்

தந்தை பெயர்: அப்துர்ரஹ்மான்

பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஅப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: ஷாம், மதீனா

பிறப்பு: ஹிஜ்ரீ- …

இறப்பு: ஹிஜ்ரீ-112 அல்லது 118

கால கட்டம்: 3.


1 . இவரிடமிருந்து 37 அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

2 . இவர்களின் செய்திகள் 160. இவற்றில் 49 செய்திகள் சரியானவை. 111 செய்திகள் மற்ற தரத்தில் உள்ளவை.

3 . ஸிகத், ஸதூக் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் 18 பேர். இவர்களின் செய்திகள் 53. இவற்றில் 26 செய்திகள் சரியானவை. 27 செய்திகள் பலவீனமானவை.

4 . பலமானவரா பலவீனமானவரா என்ற கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளர்களில் 9 பேர் அறிவித்துள்ளனர். இவர்களின் மொத்த செய்திகள் 26. இவற்றில் 15 செய்திகள் சரியானவை. 11 செய்திகள் பலவீனமானவை.

5 . பலவீனமானவர்கள், விடப்பட்டவர்களில் 10 பேர் அறிவித்துள்ளனர். இவர்களின் மொத்த செய்திகள் 81. இவற்றில் 8 செய்திகளின் கருத்து வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. 73 செய்திகள் பலவீனமானவை.

6 . இவரை சிலர் பலமானவர் என்றும், சிலர் ஸதூக்-நடுத்தரமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும், சிலர் இவர் அதிகம் அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: روايات الإمام القاسم بن عبد الرحمن الشامي في الميزان)

இந்த நூலில் உள்ள தகவலை இன்ஷா அல்லாஹ் பிறகு நாம் சரிபார்த்து பதிவு செய்கிறோம்.


காஸிம் பின் அப்துர்ரஹ்மான் அவர்களை இப்னு மயீன், புகாரீ, அபூஹாதிம் ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். மேலும் இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று (அஹ்மத் இமாம், அப்துல்லாஹ் பின் அஹ்மத் போன்ற) சிலர் விமர்சித்திருந்தாலும் அதற்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த பலவீனமானவர்கள் தான் என்றும் கூறியுள்ளனர்.

இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் பலமானவர்கள் என்றால் அதில் குறையில்லை என்று அபூஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/113, தஹ்தீபுல் கமால்-23/383, தஹ்தீபுத் தஹ்தீப்-3/414)


இமாம் அஹ்மத் அவர்கள், இவர் இடம்பெற்றுள்ள சில செய்திகளை பற்றி கேட்கப்பட்டபோது போது அதை முன்கரான செய்தி என்றும், இதற்கு காரணம் காஸிமின் தவறுதான் என்றும் கூறியுள்ளார்.

(மேலும் இப்னு மயீன் அவர்களின் மாணவர்களில் ஒருவரான) முஃபள்ளல் பின் ஃகஸ்ஸான் அல்ஃகலாயீ என்பவரும் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-23/383, தஹ்தீபுத் தஹ்தீப்-3/414)


�المجروحين لابن حبان ت زايد» (2/ 211):

�الْقَاسِم بن عبد الرَّحْمَن مولى يزِيد بن مُعَاوِيَة بن أبي سُفْيَان كنيته أَبُو عبد الرَّحْمَن كَانَ يزْعم أَنه لَقِي أَرْبَعِينَ بَدْرِيًّا روى عَنهُ أهل الشَّام كَانَ مِمَّن يَرْوِي عَن أَصْحَاب رَسُول الله صلى الله عليه وسلم المعضلات وَيَأْتِي عَن الثِّقَات بالأشياء المقلوبات حَيّ يسْبق إِلَى الْقبل أَنه كَانَ الْمُتَعَمد لَهَا

أخبرنَا مَكْحُولٌ قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ أبان قَالَ سَمِعت أَحْمد بن حَنْبَل وَذكر الْقَاسِم مولى يزِيد بن مُعَاوِيَة فَقَالَ مُنكر الحَدِيث مَا أرى الْبلَاء إِلَّا من قبل الْقَاسِم»

இப்னு ஹிப்பான் அவர்கள், இவர் 40 பத்ருஸ் ஸஹாபாக்களை சந்தித்துள்ளதாக கூறுகிறார். இவர் நபித்தோழர்களிடமிருந்து முஃளலான (அறிவிப்பாளர்கள் விடுபட்ட) செய்திகளை அறிவிப்பவர்; பலமானவர்கள் வழியாக, செய்திகளை புரட்டி-மாற்றி அறிவிப்பவர்; இதனால் இவர் இதை வேண்டுமென்றே செய்துள்ளாரோ என நினைக்கத் தோன்றும் என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அஹ்மத் அவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியதாக மக்ஹூல் ---> ஜஃபர் பின் அபான் ---> அஹ்மத் இமாம் என்ற அறிவிப்பாளர்தொடரில் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்மஜ்ரூஹீன்-இப்னு ஹிப்பான்-2/212)


இப்னு ஹஜர் அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்திலும், அதிகம் ஃகரீபான-அரிதான செய்திகளை அறிவிப்பவர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/792)


இப்னு மயீன், புகாரீ, அபூஹாதிம் ஆகியோர் இவரிடமிருந்து பலவீனமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் தான் தவறு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தாலும் மேற்கண்ட தகவல்களிலிருந்து இவர் வழியாக வரும் செய்திகளை மற்ற பலமானவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டு பார்த்தே ஏற்கவேண்டும் என்று தெரிகிறது...

அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்-இப்னு மஸ்ஊத் (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.