இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு மஸ்வூதே! என்று என்னை அழைத்தார்கள். நான் “இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று மூன்று தடவை கூறினேன். இறைநம்பிக்கையின் எந்த அம்சம் மிக பலமானது என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். “அல்லாஹ்விற்காகவே நட்புக் கொள்வதும், அல்லாஹ்விற்காகவே நேசிப்பதும், அல்லாஹ்விற்காகவே கோபம் கொள்வதும் தான் இறைநம்பிக்கையின் பலமான அம்சம்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(சிறிது நேரத்திற்கு பின்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு மஸ்வூதே! என்று என்னை அழைத்தார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இதோ இருக்கிறேன், கட்டுப்பட்டேன் என்று கூறினேன். இறைநம்பிக்கையாளர்களில் யார் சிறந்தவர் என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். மார்க்கத்தை அறிந்த பின் நற்செயல்களை செய்வோரோ இறைநம்பிக்கையாளர்களில் சிறந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(சிறிது நேரத்திற்கு பின்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு மஸ்வூதே! இறைநம்பிக்கையாளர்களில் யார் சிறந்த அறிவாளி என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். தனது கைவிரல்களை இணைத்துக் காட்டி-இவ்வாறு அவர்கள்-தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்ளும்போது அவர்களில் உண்மையை யார் நன்குதெரிந்துக்கொள்கிறாரோ அவர்தான் சிறந்த அறிவாளி. அவரின் நற்செயல்களில் குறைவு இருந்தாலும், அவர் அமல்செய்வதில் தவழ்ந்து ஊர்ந்து செல்பவராக இருந்தாலும் சரியே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
…
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10357)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ أَبِي حَسَّانَ الْأَنْمَاطِيُّ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنِي بُكَيْرُ بْنُ مَعْرُوفٍ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ ثَلَاثًا، قَالَ: «هَلْ تَدْرُونَ أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «الْوَلَايَةُ فِي اللهِ، وَالْحُبُّ فِي اللهِ، وَالْبُغْضُ فِي اللهِ»
قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذا عَرَفُوا دِينَهُمْ أَحْسَنُهُمْ عَمَلًا»
ثُمَّ قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ تَدْرِي أَيُّ الْمُؤْمِنِينَ أَعْلَمُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذَا اخْتَلَفُوا – وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ – أَبْصَرُهُمْ بِالْحَقِّ، وَإِنْ كَانَ فِي عَمَلِهِ تَقْصِيرٌ، وَإِنْ كَانَ يَزْحَفُ زَحْفًا»
ثُمَّ قَالَ: ” يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ عَلِمْتَ أَنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، لَمْ يَنْجُ مِنْهَا إِلَّا ثَلَاثُ فِرَقٍ، فِرْقَةٌ أَقَامَتْ فِي الْمُلُوكِ وَالْجَبَابِرَةِ، فَدَعَتْ إِلَى دِينِ عِيسَى، فَأُخِذَتْ فَقُتِلَتْ بِالْمَنَاشِيرِ، وَحُرِّقَتْ بِالنِّيرَانِ، فَصَبَرَتْ حَتَّى لَحِقَتْ بِاللهِ، ثُمَّ قَامَتْ طَائِفَةٌ أُخْرَى لَمْ تَكُنْ لَهُمْ قُوَّةٌ، وَلَمْ تُطِقِ الْقِيَامَ بِالْقِسْطَ، فَلَحِقَتْ بِالْجِبَالِ، فَتَعَبَّدَتْ وَتَرَهَّبَتْ، وَهُمُ الَّذِينَ ذَكَرَهُمُ اللهُ فَقَالَ {وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانَ اللهِ} [الحديد: 27] إِلَى {وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ} [الحديد: 16] ، وَفِرْقَةٌ مِنْهُمْ آمَنَتْ، فَهُمُ الَّذِينَ آمَنُوا وَصَدَّقُونِي، وَهُمُ الَّذِينَ رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ، وَهُمُ الَّذِينَ لَمْ يُؤْمِنُوا بِي وَلَمْ يُصَدِّقُونِي، وَلَمْ يَرْعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَهُمُ الَّذِينَ فَسَّقَهُمُ اللهُ “
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10357.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10207,
10208,
10209,
10210.
- இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகளில் புகைர் பின் மஃரூப் அறிவிக்கும் செய்தி பரவாயில்லை என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார்.
புகைர் குறைந்த ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவைகள் முன்கரானவை அல்ல. அவர் விசயத்தில் பிரச்சனை இல்லை (நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா 2/203 )
- அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இந்த அறிவிப்பாளர் தொடரை (ஆதாரத்திற்கேற்ற) ஹஸன் தரம் எனக் கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-998) - மற்ற அறிவிப்பாளர்தொடர்களில் விமர்சனம் உள்ளது.
1 . இந்த செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- புகைர் பின் மஃரூப் ….. —> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10357 ,
- ஸஅக் பின் ஹஸ்ன் …. —> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-376 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30443 , அல்முஃஜமுல் கபீர்-10531 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4479 , அல்முஃஜமுஸ் ஸகீர்-624 , ஹாகிம்-3790 , குப்ரா பைஹகீ-21069 ,
2 . பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-18524 .
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11537 .
….
மேலும் பார்க்க : இப்னு மாஜா-3992 .
சமீப விமர்சனங்கள்