தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3993

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிவார்கள். அனைவரும் நரகில் இருப்பர். ஒரு கூட்டத்தை தவிர. அவர்களே ஜமாஅத் ஆவர்…

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(இப்னுமாஜா: 3993)

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَمْرٍو قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقَتْ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَإِنَّ أُمَّتِي سَتَفْتَرِقُ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، كُلُّهَا فِي النَّارِ، إِلَّا وَاحِدَةً وَهِيَ: الْجَمَاعَةُ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3993.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3991.




إسناده حسن رجاله ثقات عدا هشام بن عمار السلمي وهو صدوق جهمي كبر فصار يتلقن

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார் கடைசிக்காலத்தில் நினைவாற்றலில் தடுமாறியவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
  • என்றாலும், வேறு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்தக் கருத்தில் செய்திகள் வந்திருப்பதாலும் இந்த செய்தியை சிலர் சரியானது என்றும் சிலர் ஹஸன் தரத்தில் அமைந்தது என்றும் கூறியுள்ளனர்.
  • ஆனால் இதில் எண்ணிக்கை தவறாக இருப்பதால் மற்ற செய்திகளுக்கு இது மாற்றம் என்றே முடிவு செய்யவேண்டும்.

2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-12208 , 12479 , இப்னு மாஜா-3993 , முஸ்னத் பஸ்ஸார்-6214 , முஸ்னத் அபீ யஃலா-3668 , 3938 , 3944 , 4127 , அல்முஃஜமுல் கபீர்-7659 ,

  • வஹ்ப் பின் பகிய்யா —> அப்துல்லாஹ் பின் ஸுஃப்யான் —> யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    —> அனஸ் (ரலி) 

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4886 , 7840 , அல்முஃஜமுஸ் ஸகீர்-724 ,

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3992 .

1 comment on Ibn-Majah-3993

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.