தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-2755

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2755. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தினர் எழுபதுக்கு மேற்பட்ட பிரிவினராக பிரிவார்கள். தங்கள் சுயசிந்தனையால் அனுமதிக்கப்பட்டதை தடுக்கப்பட்டது என்றும், தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். இவர்கள் தான் எனது சமுதாயத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஈஸா பின் யூனுஸ் அவர்களிடமிருந்து நுஐம் பின் ஹம்மாத் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.

அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

عوف بن مالك الأشجعي

இறப்பு: ஹிஜ்ரி 73

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அவ்ஃப் பின் மாலிக் பின் அபூ அவ்ஃப் அல்அஷ்ஜயீ அல்கதாஃபானீ

தந்தை பெயர்: மாலிக் பின் அபூ அவ்ஃப் அல்அஷ்ஜயீ

வம்சம்: அல்அஷ்ஜயீ, அல்கதாஃபானீ

புனைப்பெயர்: அபூ அம்ர், அபூ அப்துல்லாஹ், அபூ அப்துர்ரஹ்மான், அபூ ஹம்மாத், அபூ முஹம்மத்

ஊர் பெயர்: ஹிம்ஸ்

பயணித்த ஊர்கள்: ஹிஜாஸ், மதீனா, ஷாம், ஹிம்ஸ்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 73

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜயீ ரலி ஒரு நபித்தோழர். இவர் மக்கா வெற்றியின் போதும், கைபர், ஹுனைன், மூத்தா போன்ற போர்களிலும் கலந்துகொண்டார். இவர் ஹிஜாஸில் பிறந்தார்.

அபூபக்கர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஷாம் பகுதிக்குக் குடிபெயர்ந்து ஹிம்ஸ் நகரில் வசித்தார். ஹிஜ்ரி 73 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அப்துல்லாஹ் பின் ஸலாம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ முஸ்லிம் அல்கவ்லானீ, ஜுபைர் பின் நுஃபைர் அல்ஹழ்ரமீ, ஆஸிம் பின் ஹுமைத் அஸ்ஸகூனீ, கஸீர் பின் மர்ரா அல்ஹழ்ரமீ, அபூ இத்ரீஸ் அல்கவ்லானீ, அபுல் மலீஹ் பின் உஸாமா, ஸைஃப் அஷ்ஷாமீ, ஷத்தாத் பின் அம்மார், அப்துர்ரஹ்மான் பின் ஆமிர், ஹபீப் பின் உபைத் அர்ருஹபீ, ராஷித் பின் ஸஅத்


ஆதாரம்: muslimscholars.info (3051) · Should verify


حَدَّثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ السِّجِسْتَانِيُّ، قَالَ: أَخْبَرَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«سَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً أَعْظَمُهَا فِتْنَةً عَلَى أُمَّتِي قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيهِمْ يُحَرِّمُونَ الْحَلَالَ، وَيُحِلُّونَ الْحَرَامَ»

وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ أَحَدًا حَدَّثَ بِهِ إِلَّا نُعَيْمُ بْنُ حَمَّادٍ وَلَمْ يُتَابَعْ عَلَيْهِ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-2755.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2415.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நுஐம் பின் ஹம்மாத் அவர்கள் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறு செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவர் வழியாக வரும் பலவீனமான செய்திகளை அடையாளப்படுத்தி உள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1006)

  • இந்த செய்தியை இவர் மட்டும் தனித்து அறிவிப்பதால் கதீப் பக்தாதீ, இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    மிஸ்ஸீ போன்ற அறிஞர்கள் இதை நிராகரிக்கப்பட்ட செய்தி எனக் கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இது அடிப்படையற்ற செய்தி என்று விமர்சித்துள்ளார்கள்.

(நூல்: ஸவாயித் தாரீகு பஃக்தாத்-2043)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3992 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.