அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தினர் எழுபதுக்கு மேற்பட்ட பிரிவினராக பிரிவார்கள். தங்கள் சுயசிந்தனையால் அனுமதிக்கப்பட்டதை தடுக்கப்பட்டது என்றும், தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். இவர்கள் தான் எனது சமுதாயத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
(ஹாகிம்: 8325)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُؤَمَّلِ بْنِ الْحَسَنِ، ثَنَا الْفَضْلُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُسَيِّبِ، ثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، ثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«سَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً، أَعْظَمُهَا فِرْقَةُ قَوْمٍ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيِهِمْ فَيُحَرِّمُونَ الْحَلَالَ وَيُحَلِّلُونَ الْحَرَامَ»
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخْرِجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8325.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8398.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நுஐம் பின் ஹம்மாத் அவர்கள் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறு செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3992 .
சமீப விமர்சனங்கள்