அத்தியாயம்: 65
திருக்குர்ஆன் விளக்கவுரை
( ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதிலுள்ள ) அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன்- அர்ரஹீம் -நிகரற்ற அன்புடையோன்- ஆகிய இரு சொற்களும் ரஹ்மத் (கருணை) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த இரு பெயர்ச் சொற்களாகும். அர்ரஹீம், அர்ராஹிம் ஆகிய இரண்டும் ஒரே பொருளுடையவைதாம். இவை, (பொருள் தருவதில்) ஆலிம் மற்றும் அலீம் -அறிந்தவன்- எனும் சொற்களை போன்றைவாயாகும்.
பாடம்: 1
குர்ஆனின் தொடக்க (அத்தியாயமான அல்ஃபாத்திஹா) அத்தியாயம் தொடர்பாக வந்துள்ளவை.
இதற்கு உம்முல் கிதாப் (இறைவேதத்தின் தாய்) என்று பெயரிடப்பட்டுள்ளது. காரணம், ஏடுகளில் (முதலாவதாக) இதை எழுதித் தான் (திருக்குர்ஆன்) தொடங்கப்படுகின்றது. தொழுகையிலும் இதை (முதலாவதாக) ஓதித் தான் தொடங்கப்படுகின்றது.
(இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் மூலத்தில் மாலிகி யவ்மித்தீன் என்பதில் இடம்பெற்றுள்ள) தீன் எனும் சொல், நன்மைக்கும் தீமைக்கும் வழங்கப்பட விருக்கின்ற பிரதிபலனைக் குறிக்கும். (எனவே, பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி என இவ்வசனத்தின் பொருள் அமையும்.)
கமா ததீனு துதானு (நீ எப்படி நடந்து கொள்வாயோ அப்படியே நடத்தப்படுவாய் எனும் பழமொழியின் மூலத்தில் தீன் எனும் சொல்லில் தொனிக்கின்றபடி, ஒரு செயலுக்கு அதன் பதிலாக நிகழ்கின்ற, அதே போன்ற விளைவைத் தருகின்ற பிரதிபலனை இச்சொல் குறிக்கின்றது.)
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அவ்வாறில்லை. மாறாக, (உண்மை என்னவெனில்) தீனை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள் எனும் குர்ஆனின் (82:9ஆவது) வசனத்தில் உள்ள தீனை என்பதற்குச் செயல்களுக்கான விசாரணையை என்று பொருள்.
(56:86 ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) மதீனீன் எனும் சொல்லுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர் என்று பொருள்.
அபூஸயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின் ), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன்,
அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்ததூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள்.
பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அலஃபாத்திஹா அத்தியாயம்) தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.
அத்தியாயம்: 65
(புகாரி: 4474)65 – كِتَابُ تَفْسِيرِ القُرْآنِ
{الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]: «اسْمَانِ مِنَ الرَّحْمَةِ، الرَّحِيمُ وَالرَّاحِمُ بِمَعْنًى وَاحِدٍ، كَالعَلِيمِ وَالعَالِمِ»
بَابُ مَا جَاءَ فِي فَاتِحَةِ الكِتَابِ
وَسُمِّيَتْ أُمَّ الكِتَابِ أَنَّهُ يُبْدَأُ بِكِتَابَتِهَا فِي المَصَاحِفِ، وَيُبْدَأُ بِقِرَاءَتِهَا فِي الصَّلاَةِ، وَالدِّينُ: الجَزَاءُ فِي الخَيْرِ وَالشَّرِّ، كَمَا تَدِينُ تُدَانُ “
وَقَالَ مُجَاهِدٌ: ” {بِالدِّينِ} [الانفطار: 9]: بِالحِسَابِ، {مَدِينِينَ} [الواقعة: 86]: مُحَاسَبِينَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ المُعَلَّى، قَالَ
كُنْتُ أُصَلِّي فِي المَسْجِدِ، فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أُجِبْهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ أُصَلِّي، فَقَالَ: ” أَلَمْ يَقُلِ اللَّهُ: {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24].
ثُمَّ قَالَ لِي: «لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي القُرْآنِ، قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ المَسْجِدِ».
ثُمَّ أَخَذَ بِيَدِي، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، قُلْتُ لَهُ: «أَلَمْ تَقُلْ لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي القُرْآنِ»،
قَالَ: {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2] «هِيَ السَّبْعُ المَثَانِي، وَالقُرْآنُ العَظِيمُ الَّذِي أُوتِيتُهُ»
Bukhari-Tamil-4474.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4474.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் பின் முஅல்லா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-15730 , 17851 , தாரிமீ-1533 , 3414 , புகாரி-4474 , 4647 , 4703 , 5006 , இப்னு மாஜா-3785 , அபூதாவூத்-1458 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-913 , முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-862 , 863 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-777 , அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-4704 .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3125 ,
சமீப விமர்சனங்கள்