தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4478

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 4

உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்). (இதை மீறியதால்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். (அல்குர்ஆன்: 2:57) எனும் இறைவசனம்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மன்னு என்பது வேலம் பசை ஆகும். சல்வா என்பது பறவை ஆகும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


அத்தியாயம்: 65

(புகாரி: 4478)

بَابٌ: وَقَوْلُهُ تَعَالَى: {وَظَلَّلْنَا عَلَيْكُمُ الغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ المَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ} [البقرة: 57]

وَقَالَ مُجَاهِدٌ:  المَنُّ: صَمْغَةٌ، وَالسَّلْوَى: الطَّيْرُ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«الكَمْأَةُ مِنَ المَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»


Bukhari-Tamil-4478.
Bukhari-TamilMisc-4478.
Bukhari-Shamila-4478.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




 

 

 


இந்த செய்தியின் கருத்து மருத்துவ ஆய்வின் படி சரியானதாகும். காளானின் சாறு கண்ணோயை நீக்குகிறது என்பது உண்மை என இப்னு அலீ ஸீனா போன்ற மருத்துவர்கள் கூறியுள்ளனர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-5708)


 

 


1 . இந்தக் கருத்தில் ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-, புகாரி-4478, 4639, 5708, முஸ்லிம்-4160, 4161, 4162, 4163, 4164, 4165, இப்னு மாஜா-3454, திர்மிதீ-2067, …


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2066.


… இதைப் பற்றி அதிக செய்திகள் உள்ளன. இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்யப்படும்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.