பாடம் : 4
மேலும், நாம் உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படி செய்தோம். உங்களுக்கு மன்னு, சல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள் (என்றும் உங்களிடம் கூறினோம். இக்கட்டளைகளை மீறியதால்) எமக் கொன்றும் அவர்கள் தீங்கிழைத்து விடவில்லை. மாறாக, தமக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டார்கள் எனும் (2:57ஆவது) இறைவசனம்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மன்னு என்பது வேலம் பசை ஆகும். சல்வா என்பது பறவை ஆகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்.
Book : 65
بَابٌ: وَقَوْلُهُ تَعَالَى: {وَظَلَّلْنَا عَلَيْكُمُ الغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ المَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ} [البقرة: 57]
وَقَالَ مُجَاهِدٌ: المَنُّ: صَمْغَةٌ، وَالسَّلْوَى: الطَّيْرُ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«الكَمْأَةُ مِنَ المَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»
Bukhari-Tamil-4478.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4478.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இந்த செய்தியின் கருத்து மருத்துவ ஆய்வின் படி சரியானதாகும். காளானின் சாறு கண்ணோயை நீக்குகிறது என்பது உண்மை என இப்னு அலீ ஸீனா போன்ற மருத்துவர்கள் கூறியுள்ளனர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுள்ளார். (நூல்: ஃபத்ஹுல் பாரீ-5708)
1 . இந்தக் கருத்தில் ஸயீத் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-, புகாரி-4478 , 4639 , 5708 , முஸ்லிம்-4160 , 4161 , 4162 , 4163 , 4164 , 4165 , இப்னு மாஜா-3454 , திர்மிதீ-2067 , …
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2066 .
..இதைப் பற்றி அதிக செய்திகள் உள்ளன. இன்ஷா அல்லாஹ் பிறகு பதிவு செய்யப்படும்.
சமீப விமர்சனங்கள்