தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-457

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 157

பள்ளிவாசலில் விளக்கேற்றுவது.

நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (அது சமயம் அந்த ஊர்களில் யுத்தம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது). நீங்கள் அங்கு சென்று தொழமுடியவில்லையென்றால் அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்புங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸியாத் பின் அபூ ஸவ்தா

(அபூதாவூத்: 457)

بَابٌ فِي السُّرُجِ فِي الْمَسَاجِدِ

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مِسْكِينٌ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ، عَنْ زِيَادِ بْنِ أَبِي سَوْدَةَ، عَنْ مَيْمُونَةَ، مَوْلَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ: «ائْتُوهُ فَصَلُّوا فِيهِ» وَكَانَتِ الْبِلَادُ إِذْ ذَاكَ حَرْبًا، «فَإِنْ لَمْ تَأْتُوهُ وَتُصَلُّوا فِيهِ، فَابْعَثُوا بِزَيْتٍ يُسْرَجُ فِي قَنَادِيلِهِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-457.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-385.




  • இந்த செய்தியை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் அவர்கள் முன்கர்- நிராகரிக்கப்பட்டது என்று விமர்சித்துள்ளார். காரணம் அப்துல் ஹக் அவர்கள் இது பலமானசெய்தி அல்ல என்று கூறியுள்ளார். இப்னுல் கத்தான் அவர்கள் ஸியாத் பின் அபூ ஸவ்தாவின் அறிவிப்பையும், அவரின் சகோதரர் உஸ்மானின் அறிவிப்பையும் நிறுத்திவைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். (நூல்: மீஸானுல் இஃதிதால் 2/ 90)
  • மேலும் இந்த செய்தியை ஸியாத் தனது சகோதரர் உஸ்மான் வழியாகவே அறிவித்துள்ளார். இதில் அவர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-27626 , 27627 , இப்னு மாஜா-1407 , அபூதாவூத்-457 , முஸ்னத் அபீ யஃலா-7088 , அல்முஃஜமுல் கபீர்-54 , 55 , 56 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8445 , குப்ரா பைஹகீ-4316 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.