தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3585

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனைகளிலேயே மிகவும் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் பிரார்த்தனை ஆகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” என்ற திக்ராகும்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது அரிதான செய்தியாகும். இதில் வரும் ஹம்மாத் பின் அபூஹுமைத் என்பவரின் (பிரபல்யமான) பெயர், முஹம்மது பின் அபூஹுமைத் என்பதாகும். இவரின் புனைப்பெயர் அபூஇப்ராஹீம் அல்அன்ஸாரீ, அல்மதனீ என்பதாகும். இவர் ஹதீஸ்கலை அறிஞர்களின் பார்வையில் பலமானவர் அல்ல.

(திர்மிதி: 3585)

بَابٌ

حَدَّثَنَا أَبُو عَمْرٍو مُسْلِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنْ حَمَّادِ بْنِ أَبِي حُمَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَحَمَّادُ بْنُ أَبِي حُمَيْدٍ هُوَ: مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، وَهُوَ أَبُو إِبْرَاهِيمَ الأَنْصَارِيُّ المَدِينِيُّ وَلَيْسَ هُوَ بِالقَوِيِّ عِنْدَ أَهْلِ الحَدِيثِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3585.
Tirmidhi-Shamila-3585.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3539.




إسناد شديد الضعف فيه محمد بن أبي حميد الأنصاري وهو منكر الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35284-ஹம்மாத் பின் அபூஹுமைத் என்ற முஹம்மது பின் அபூஹுமைத் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்ற பல அறிஞர்கள் இவர் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/549)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-6961 , திர்மிதீ-3585 , ஷுஅபுல் ஈமான்-3489 ,

  • இந்த செய்தி, அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வேறு சில நூல்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்திலும் முஹம்மது பின் அபூஹுமைத் வருவதால் இவை மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களாகும்.

மேலும் பார்க்க: மாலிக்-572 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.