அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரார்த்தனையில் மிகச் சிறந்தது, அரஃபா நாளின் போது செய்யும் பிரார்த்தனையாகும்.
நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு” என்பதாகும்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் (ரஹ்)
(பைஹகீ-குப்ரா: 8391)أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْمِهْرَجَانِيُّ، أنبأ أَبُو بَكْرِ بْنُ جَعْفَرٍ الْمُزَكِّي، ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْعَبْدِيُّ، ثنا يَحْيَى بْنُ بُكَيْرٍ، ثنا مَالِكٌ، عَنْ زِيَادٍ مَوْلَى ابْنِ عيَّاشٍ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ كَرِيزٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-8391.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-7747.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார். இடையில் நபித்தோழர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது முர்ஸலான செய்தி. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் அவர்கள், சொர்க்கவாசி என்று சுபச்செய்தி கூறப்பட்ட 10 நபித்தோழர்களில் ஒருவரான தல்ஹா பின் உபைதுல்லா என்று நினைத்து விட்டார். இது தவறு என இப்னுல் இராகீ அவர்கள் தனது நூலில் கூறியுள்ளார். (நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/21)
மேலும் பார்க்க: மாலிக்-572 .
சமீப விமர்சனங்கள்