அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாதவரை அவர்கள் மீது அல்லாஹ்வின் கரம் இருக்கிறது. ஆனால் அவ்விருவரில் ஒருவர் மோசடி செய்தால், அவர்களை விட்டு தன் கரத்தை அல்லாஹ் அகற்றிவிடுகிறான்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஹய்யான் (ரஹ்)
(daraqutni-2934: 2934)ثنا هُبَيْرَةُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الشَّيْبَانِيُّ , نا أَبُو مَيْسَرَةَ النَّهَاوَنْدِيُّ , نا جَرِيرٌ , عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ , عَنْ أَبِيهِ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَدُ اللَّهِ عَلَى الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ , فَإِذَا خَانَ أَحَدُهُمَا صَاحِبَهُ رَفَعَهَا عَنْهُمَا»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2934.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2576.
இது முர்ஸலான, பலவீனமான செய்தி.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம்-அலீ பின் உமர்-அபுல்ஹஸன்
2 . ஹுபைரா பின் முஹம்மத்-அபூஅலீ
3 . அபூமைஸரா-அன்னஹாவந்தீ-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அப்துல்லாஹ்
4 . ஜரீர் பின் அப்துல்ஹமீத்
5 . அபூஹய்யான்-யஹ்யா பின் சயீத்-அத்தைமீ
6 . ஸயீத் பின் ஹய்யான்-அபூயஹ்யா (ரஹ்)
المجروحين لابن حبان ت حمدي (1/ 157):
73 – أحمد بن عبد الله بن ميسرة الحراني أبو ميسرة (1)
سكن نهاوند، يروي عن يحيى بن سليم وأهل العراق، يأتي عن الثقات ما ليس من حديث الأثبات، لا يحل الاحتجاج به.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-4471-அபூமைஸரா பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்றும், - இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஆகியோர் இவர் பலமானவர்கள் வழியாக அவர்கள் கூறாத செய்திகளை அறிவிப்பவர்; ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் திருட்டுத்தனம் செய்பவர் என்றும் விமர்சித்துள்ளனர். - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவர் வேண்டுமென்றே பொய் சொல்பவர் அல்ல. மனனத்திலிருந்து ஹதீஸை அறிவிப்பார். அதனால் சில செய்திகளில் தவறு ஏற்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார். - இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள், இவர் ஊர்வாசிகள் இவரை விமர்சித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/58, அல்மஜ்ரூஹீன்-1/444, 1/157, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1/289, லிஸானுல் மீஸான்-1/497)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-3383.
சமீப விமர்சனங்கள்