அப்துல்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனது தந்தை, இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நீங்கள் ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர மற்றதை தொட்டதை நான் பார்த்ததில்லையே ஏன்? எனக் கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “அவ்விரண்டையும் தொடுவது பாவங்களை அழித்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்பதால் அவ்விரண்டையும் தொடுகிறேன் என்று பதிலளித்தார்கள்.
…
எவர் காபாவை ஏழு முறை வலம் வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவாரோ அவர் ஒரு அடிமையை உரிமையிட்டவரைப் போன்றவர் ஆவார். கஃபாவை வலம் வரும் போது ஒரு (கால்) எட்டை வைத்து, மற்றொரு (கால்) எட்டை உயர்த்தும் போது பத்து நன்மைகள் எழுதப்பட்டு, பத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன.
…
(முஸ்னது அஹ்மத்: 4462)حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ،
أَنَّهُ سَمِعَ أَبَاهُ يَقُولُ لِابْنِ عُمَرَ مَا لِي لَا أَرَاكَ تَسْتَلِمُ إِلَّا هَذَيْنِ الرُّكْنَيْنِ الْحَجَرَ الْأَسْوَدَ، وَالرُّكْنَ الْيَمَانِيَ، فَقَالَ ابْنُ عُمَرَ: إِنْ أَفْعَلْ فَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اسْتِلَامَهُمَا يَحُطُّ الْخَطَايَا»
قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: «مَنْ طَافَ أُسْبُوعًا يُحْصِيهِ، وَصَلَّى رَكْعَتَيْنِ كَانَ لَهُ كَعِدْلِ رَقَبَةٍ»
قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: «مَا رَفَعَ رَجُلٌ قَدَمًا، وَلَا وَضَعَهَا إِلَّا كُتِبَتْ لَهُ عَشْرُ حَسَنَاتٍ، وَحُطَّ عَنْهُ عَشْرُ سَيِّئَاتٍ، وَرُفِعَ لَهُ عَشْرُ دَرَجَاتٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-4462.
Musnad-Ahmad-Shamila-4462.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4319.
சமீப விமர்சனங்கள்