நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(திர்மிதி: 2027)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ أَبِي غَسَّانَ مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الحَيَاءُ وَالعِيُّ شُعْبَتَانِ مِنَ الإِيمَانِ، وَالبَذَاءُ وَالبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي غَسَّانَ مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ. وَالعِيُّ قِلَّةُ الكَلَامِ، وَالبَذَاءُ: هُوَ الفُحْشُ فِي الكَلَامِ، وَالبَيَانُ: هُوَ كَثْرَةُ الكَلَامِ مِثْلُ هَؤُلَاءِ الخُطَبَاءِ الَّذِينَ يَخْطُبُونَ فَيُوَسِّعُونَ فِي الكَلَامِ وَيَتَفَصَّحُونَ فِيهِ مِنْ مَدْحِ النَّاسِ فِيمَا لَا يُرْضِي اللَّهَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1950.
Tirmidhi-Shamila-2027.
Tirmidhi-Alamiah-1950.
Tirmidhi-JawamiulKalim-1946.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11514-ஹஸ்ஸான் பின் அதிய்யா பலமானவர் என்றாலும், அபூஉமாமா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என சிலர் கூறியுள்ளனர்… எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர்தொடர் என்பதால் பலவீனமானதாகும்.
- காரணம், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவரை தப்உத் தாபிஈன்களில் (தாபிஈன்களுக்கு அடுத்த தலைமுறையில்) சேர்த்துள்ளார் என்பதால் இவர் நபித்தோழர்களிடம் செவியேற்கவில்லை என்று தெரிகிறது.
(நூல்கள்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்1/81, துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-,)
இந்தக் கருத்து வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
2 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30428 , அஹ்மத்-22312 , திர்மிதீ-2027 , அல்முஃஜமுல் கபீர்-7481 , ஹாகிம்-17 , 170 ,
மேலும் பார்க்க: தாரிமீ-526 .
அஸ்ஸலாமு அலைக்கும்
இதன் தரம் என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும்.
கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.