தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-526

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அவ்ன் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம், நபித்தோழர்களில் இன்ன மனிதர் எனக்கு ஹதீஸ்களை அறிவித்தார் என்று கூறினேன். உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவரை தெரிந்துக்கொண்டார்கள்.

மேலும் நான்,

“வெட்கமும், பத்தினித்தனமும்-கற்பொழுக்கமும், குறைவாக பேசுவதும், மார்க்க ஞானமும் ஈமானுடைய அம்சமாகும். இவை மறுமையில் அதிக நன்மையைத் தரும். உலகில் குறைவை ஏற்படுத்தும். இவை மறுமையில் நன்மையைத் தருவதே அதிகமாகும்.

கெட்ட வார்த்தையும், கெட்ட குணமும், கஞ்சத்தனமும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். இவை உலகில் அதிக நன்மையைத் தருவதாக தெரியலாம். ஆனால் மறுமையில் குறைவை ஏற்படுத்தும். இவை மறுமையில் பாதிப்பை ஏற்படுத்துவதே அதிகமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அந்த நபித்தோழர் எனக்கு அறிவித்தார் எனக் கூறினேன்.

(ஸுனன் தாரிமீ: 526)

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا أَبُو غِفَارٍ الْمُثَنَّى بْنُ سَعْدٍ الطَّائِيُّ، حَدَّثَنِي عَوْنُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ:

قُلْتُ: لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنِي فُلَانٌ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَرَفَهُ عُمَرُ، قُلْتُ: حَدَّثَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْحَيَاءَ، وَالْعَفَافَ، وَالْعِيَّ، عِيَّ اللِّسَانِ، لَا عِيَّ الْقَلْبِ، وَالْفِقْهَ مِنَ الْإِيمَانِ، وَهُنَّ مِمَّا يَزِدْنَ فِي الْآخِرَةِ، وَيُنْقِصْنَ مِنَ الدُّنْيَا، وَمَا يَزِدْنَ فِي الْآخِرَةِ أَكْثَرُ، وَإِنَّ الْبَذَاءَ، وَالْجَفَاءَ، وَالشُّحَّ، مِنَ النِّفَاقِ، وَهُنَّ مِمَّا يَزِدْنَ فِي الدُّنْيَا، وَيُنْقِصْنَ فِي الْآخِرَةِ، وَمَا يُنْقِصْنَ فِي الْآخِرَةِ أَكْثَرُ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-526.
Darimi-Alamiah-509.
Darimi-JawamiulKalim-511.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32758-அவ்ன் பின் அப்துல்லாஹ் தாபிஈ ஆவார். இவர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) போன்றோரிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார் என புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஆகியோர் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/384, தஹ்தீபுத் தஹ்தீப்-3/338…)


  • இவர் இப்னுமஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இமாம் திர்மிதீ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவர் நபித்தோழர்களிடமிருந்து அறிவிப்பது முர்ஸல் என்று கூறப்படுகிறது என்று மிஸ்ஸீ இமாம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-22/453, தஹ்தீபுத் தஹ்தீப்-3/338…)

(ஆனால் யார் இவ்வாறு கூறியது என்பதை மிஸ்ஸீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் குறிப்பிடவில்லை. எனவே இது ஏற்கத்தக்க விமர்சனமல்ல.)

  • இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-3381)


1 . இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரிமீ-526527 ,


2 . அபூஉமாமா (ரலி­) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2027 .


3 . முஹம்மத் பின் கஅப் (ரஹ்­) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

4 . குர்ரா பின் இயாஸ் (ரலி­) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

5 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி­) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

6 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி­) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.