நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது?. வெயில் காலத்தில் மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
(ஹாகிம்: 7859)أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ يَعْقُوبَ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ حَبِيبٍ، ثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَنْبَأَ الْمَسْعُودِيُّ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَا لِي وَلِلدُّنْيَا إِنَّمَا مَثَلِي وَمَثَلُ الدُّنْيَا كَمَثَلِ رَاكِبٍ قَالَ تَحْتَ شَجَرَةٍ فِي يَوْمٍ صَائِفٍ فَرَاحَ وَتَرَكَهَا»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7859.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7927.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அல்மஸ்வூதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் கொள்ளுப் பேரன்) கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார். இவர் மூளைக் குழம்புவதற்கு முன் கூஃபாவிலும், பஸராவிலும் இவரிடமிருந்து செவியேற்றவர்கள் வழியாக வரும் செய்தி சரியானது என அபூநுஐம் அவர்கள் கூறியுள்ளார். (நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1/282)
- இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-10426-ஜஃபர் பின் அவ்ன் கூஃபாவாசி என்பதால் இது சரியான செய்தியாகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2377 .
…
சமீப விமர்சனங்கள்