தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6296

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் அடிமை அத்ஹம் அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இருபெருநாட்களிலும் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்கு, “தகப்பலல்லாஹு மின்னா வமின்க யா அமீரல் முஃமினீன்” (இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ் உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறுவோம். அவர்களும் அவ்வாறே எங்களுக்கு பதில் கூறுவார்கள். அதை அவர்கள் ஆட்சேபிக்கமாட்டார்கள்.

(பைஹகீ-குப்ரா: 6296)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , ثنا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ، ثنا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ، ثنا عَبْدُ السَّلَامِ الْبَزَّازُ، عَنْ أَدْهَمَ مَوْلَى عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ قَالَ:

كُنَّا نَقُولُ لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي الْعِيدَيْنِ: ” تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ , فَيَرُدُّ عَلَيْنَا وَلَا يُنْكِرُ ذَلِكَ عَلَيْنَا

وَقَدْ رُوِيَ حَدِيثٌ مَرْفُوعٌ فِي كَرَاهِيَةِ ذَلِكَ وَلَا يَصِحُّ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6296.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5816.




இது பொய்யான, மக்தூஃவான செய்தி.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துஸ்ஸலாம் அல்பஸ்ஸார் பற்றி அம்ர் பின் அலீ அவர்கள், பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல் 6/47).


تاريخ دمشق لابن عساكر (6/ 436):
قرأت بخط عبد الوهاب بن جعفر الميداني في سماعه من أبي سليمان بن زبر أنا أبي قال وأنا أبو قلابة نا عبد الملك أبو العباس الباهلي نا إبراهيم بن أبي عبلة قال دخلنا على عمر بن عبد العزيز يوم العيد والناس يسلمون عليه ‌ويقولون ‌تقبل ‌الله ‌منا ‌ومنك يا أمير المؤمنين فيرد عليهم ولا ينكر عليهم


மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-6294.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.