தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6294

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

பெருநாளில் மக்கள், தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று வாழ்த்துக் கூறுவது.

நான் பெருநாள் அன்று வாஸிலா இப்னு அஸ்கஃ (ரலி) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க” (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன்.

அதற்கவர்கள் ஆம் ! தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினார்கள். பிறகு அவர்கள், ”நான் பெருநாளன்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  ”நஅம் (ஆம்), தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று பதிலுரைத்தார்கள் என்று கூறினார்.

அறிவிப்பவர்: காலித் பின் மஃதான் (ரஹ்)

(பைஹகீ-குப்ரா: 6294)

بَابُ مَا رُوِيَ فِي قَوْلِ النَّاسِ يَوْمَ الْعِيدِ بَعْضُهُمْ لِبَعْضٍ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ

أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ بْنُ عَبْدَانَ، أنبأ أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سُفْيَانَ، ثنا أَبُو عَلِيٍّ أَحْمَدُ بْنُ الْفَرَجِ الْمُقْرِئُ , ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الشَّامِيُّ، ثنا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ:

لَقِيتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ فِي يَوْمِ عِيدٍ , فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , فَقَالَ: ” نَعَمْ، تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ ” , قَالَ وَاثِلَةُ: ” لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , قَالَ: ” نَعَمْ , تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6294.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-5814.




إسناد شديد الضعف فيه محمد بن إبراهيم الشامي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35388-முஹம்மத் பின் இப்ராஹிம் அஷ்ஷாமீ பற்றி, இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் பல அறிஞர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/492). எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் இதில் வரும் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அறியப்படாதவர், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அல்ஃபரஜ் பலவீனமானவர்கள் ஆவார்கள்…

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-123 , குப்ரா பைஹகீ-6294 , 6295 , 6296 , 6297 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.