தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1160

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் தேவைக்காக கணவன் மனைவியை அழைத்தால் அவள் அடுப்பில் (வேலை பார்த்துக் கொண்டு) இருந்தாலும் அவனிடத்தில் செல்லட்டும்.

அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)

(திர்மிதி: 1160)

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ طَلْقِ بْنِ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا الرَّجُلُ دَعَا زَوْجَتَهُ لِحَاجَتِهِ فَلْتَأْتِهِ، وَإِنْ كَانَتْ عَلَى التَّنُّورِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1080.
Tirmidhi-Shamila-1160.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1076.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34403-கைஸ் பின் தல்க் அவர்களைப் பற்றி சிலர் நபித்தோழர் என்று கூறுகின்றனர். என்றாலும் இவர் தாபிஈ என்பதே சரியானது.
  • இவரைப் பற்றி இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/450)
  • இந்த செய்தியை திர்மிதீ இமாம் ஹஸன் என்றும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் சரியானது என்றும் கூறியுள்ளனர். (நூல்: அஸ்ஸஹீஹா-1202)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17135 , அஹ்மத்-16288 , திர்மிதீ-1160 , குப்ரா நஸாயீ-8922 , இப்னு ஹிப்பான்-4165 , அல்முஃஜமுல் கபீர்-8235 , 8240 , குப்ரா பைஹகீ-14710 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.