நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு உணவைத் தவிர்க்காதீர்கள். சாதாரண-காய்ந்த பேரீத்தம்பழமாக இருந்தாலும் ஒரு கைப்பிடி அளவேனும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இரவு உணவைத் தவிர்ப்பது முதுமையை ஏற்படுத்தும்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(திர்மிதி: 1856)بَابُ مَا جَاءَ فِي فَضْلِ العَشَاءِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَعْلَى الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ القُرَشِيُّ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عَلَّاقٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَعَشَّوْا وَلَوْ بِكَفٍّ مِنْ حَشَفٍ، فَإِنَّ تَرْكَ العَشَاءِ مَهْرَمَةٌ»
هَذَا حَدِيثٌ مُنْكَرٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ وَعَنْبَسَةُ يُضَعَّفُ فِي الحَدِيثِ وَعَبْدُ المَلِكِ بْنِ عَلَّاقٍ مَجْهُولٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1856.
Tirmidhi-Shamila-1856.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1774.
- இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள திர்மிதீ இமாம் அவர்கள், இது பொய்யென சந்தேகிக்கப்பட்ட ஹதீஸாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதில் வரும் ராவீ-32695-அன்பஸா பின் அப்துர்ரஹ்மான் என்பார் ஹதீஸ் விஷயத்தில் பலவீனமானவர் என்றும், மற்றொரு அறிவிப்பாளரான ராவீ-26582-அப்துல் மலிக் பின் அல்லாக் என்பார் யாரென அறியப்படாதவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
- மேலும் இதில் வரும் ராவீ-43643-முஹம்மது பின் யஃலா பலவீனமானவர் ஆவார்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : இப்னு மாஜா-3355 , திர்மிதீ-1856 ,
சமீப விமர்சனங்கள்