தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-7111

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

வல்லமை மிக்க, உயர்ந்தோன் அல்லாஹ் ஆயிஷா (ரலி) அவர்களின் முன், பின் பாவங்களை மன்னித்துவிட்டான் என்ற செய்தி.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்ட நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எனக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினேன். உடனே அவர்கள், அல்லாஹும் மக்ஃபிர் லிஆயிஷா மா தகத்தம மின் தம்பிஹா , வமா தஅக்கர , மா அஸர்ரத் , வமா அஃலனத் என்று பிரார்த்தனை செய்தார்கள்….

(அதனால் நான் மகிழ்ச்சியில் சிரித்தேன்…

அதற்கு நபி (ஸல்) அவர்கள், என்னுடைய இந்த பிரார்த்தனை உனக்கு சந்தோசத்தை ஏற்படுத்துகிறதா? என்று கேட்டார்கள். அதற்கு நான் உங்களின் இந்த பிரார்த்தனையால் நான் சந்தோசம் அடையாமல் இருப்பேனா? என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனது சமுதாயத்திற்காக ஒவ்வொரு தொழுகையிலும் இந்த பிரார்த்தனையை நான் செய்கிறேன் என்று கூறினார்கள்.

(இப்னு ஹிப்பான்: 7111)

ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا ذُنُوبَ عَائِشَةَ مَا تَقَدَّمَ مِنْهَا وَمَا تَأَخَّرَ

أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي حَيْوَةُ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ:

لَمَّا رَأَيْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طِيبَ نَفْسٍ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ لِي، فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِعَائِشَةَ مَا تَقَدَّمَ مِنْ ذَنَبِهَا وَمَا تَأَخَّرَ، مَا أَسَرَّتْ وَمَا أَعْلَنَتْ»، فَضَحِكَتْ عَائِشَةُ حَتَّى سَقَطَ رَأْسُهَا فِي حِجْرِهَا مِنَ الضَّحِكِ، قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَسُرُّكِ دُعَائِي؟ »، فَقَالَتْ: وَمَا لِي لَا يَسُرُّنِي دُعَاؤُكَ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ إِنَّهَا لَدُعَائِي لِأُمَّتِي فِي كُلِّ صَلَاةٍ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-7111.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-7266.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14239-அபூஸக்ர்-ஹுமைத் பின் ஸியாத் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலவீனமானவர் எனக் கூறியதாகவும், சுமாரானவர் எனக் கூறியதாகவும் இரண்டு வகையான கருத்துக்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் இவர் சுமாரானவர் எனக் கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவர் பலமானவர் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1/495).
  • இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் ஹஸன் தரம் என்று குறிப்பிடுகிறார். (நூல்: அஸ்ஸஹீஹா-2254)
  • இந்தக்கருத்தில் வரும் மற்ற அறிவிப்பாளர்தொடர்கள் பலவீனமாக உள்ளன….

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.