தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1851

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுதல்.

ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுங்கள், அதை பூசிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள் நிறைந்த மரத்திலிருந்து வருவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

(திர்மிதி: 1851)

بَابُ مَا جَاءَ فِي أَكْلِ الزَّيْتِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ»

هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ، وَكَانَ عَبْدُ الرَّزَّاقِ يَضْطَرِبُ فِي رِوَايَةِ هَذَا الحَدِيثِ، فَرُبَّمَا ذَكَرَ فِيهِ عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرُبَّمَا رَوَاهُ عَلَى الشَّكِّ فَقَالَ: أَحْسَبُهُ عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرُبَّمَا قَالَ: عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا

حَدَّثَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعَمَرٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عُمَرَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1774.
Tirmidhi-Shamila-1851.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1769.




1 . இந்தச் செய்தியை பல வருடங்களாக அப்துர் ரஸ்ஸாக், நபித்தோழர் வழியாக இல்லாமல் நபி (ஸல்) அவர்கள், அறிவித்ததாகவே (முர்ஸலாக) அறிவித்து வந்தார். பின்னர் உமர் (ரலி) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்ததாக நான் எண்ணுகிறேன் என்று (சந்தேகமாக) அறிவித்தார். பின்னர் அவர் மரணமடையும் வரை உமர் (ரலி) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்ததாக சந்தேகம் இல்லாமல் அறிவித்தார் என்று இப்னு அபீ ஹாத்திம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல்: இலலுல் ஹதீஸ்-1520)

2 . அப்துர்ரஸ்ஸாக் கடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனார்; மூளையும் குழம்பிவிட்டது.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார் பாகம்: 2, பக்கம்: 354

  • நபித்தோழர் வழியாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெறும் செய்தியை அப்துர் ரஸ்ஸாக் கடைசி காலத்தில் தான் அறிவித்துள்ளார். அதற்கு முன்னர் வரை முர்ஸலாக நபித்தோழர் இல்லாமல்தான் அறிவித்துள்ளார். எனவே கடைசிக் காலத்தில் அவர் அறிவித்த செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக அமையாது.

3 . இந்தச் செய்தியைப் பற்றி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களிடம் திர்மிதீ அவர்கள் கேட்ட போது, ‘இது நபித்தோழர் விடுபட்ட முர்ஸலான செய்தி’ என்று குறிப்பிட்டார்கள் என திர்மிதீ அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

நூல்: இலலுல் கபீர், பாகம்: 2, பக்கம்: 210

4 . ஆலிவ் எண்ணெய் தொடர்பாக வரும் செய்தி முர்ஸான செய்தி என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: தாரீக் இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
பாகம்: 3, பக்கம்: 142

1 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அப்துர் ரஸ்ஸாக்-20475 , இப்னு மாஜா-3319 , திர்மிதீ-1851 , முஸ்னத் பஸ்ஸார்-275 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9196 , ஹாகிம்-7142 , ஷுஅபுல் ஈமான்-5539 ,

2 . அபூஉஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-1852 .

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு மாஜா-3320 .

  • ஆலிவ் எண்ணெய் தொடர்பாக சிறப்பித்து வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.
  • ஆயினும் ஆலிவ் மரம் பாக்கியம் நிறைந்த மரம் என்று (திருக்குர்ஆன்: 24:35) வசனம் கூறுகிறது.
  • மருத்துவ ரீதியில் அதில் குணம் உண்டு என்றோ அல்லது மருந்தாகப் பயன்படுத்தலாம் என்றோ உறுதியான செய்திகள் இருந்தால் அதன் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.