ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுங்கள், அதை பூசிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள் நிறைந்த மரத்திலிருந்து வருவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி)
(திர்மிதி: 1852)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، وَأَبُو نُعَيْمٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ رَجُلٍ يُقَالُ لَهُ: عَطَاءٌ مِنْ أَهْلِ الشَّامِ، عَنْ أَبِي أَسِيدٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ، إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1852.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1770.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28466-அதா அஷ்ஷாமீ என்பவர் பற்றி, இவருடைய செய்திகள் தகுதி வாய்ந்தவை இல்லை என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறியுள்ளார்கள். உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் இவரைப் பலவீனமானவர் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்:7, பக்கம்: 197) எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அபூஉஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-16054 , 16055 , தாரிமீ-2096 , திர்மிதீ-1852 , குப்ரா நஸாயீ-6668 , 6669 , அல்முஃஜமுல் கபீர்-596 , 597 , ஹாகிம்-3504 , ஷுஅபுல் ஈமான்-5538 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-1851 .
சமீப விமர்சனங்கள்