தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-92

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 69

பூனை (வாய்வைத்து) எச்சில்படுத்திய தண்ணீர் குறித்து வந்துள்ளவை.

அப்துல்லாஹ் பின் அபூகத்தாதா (ரஹ்) அவர்களின் துணைவியார் கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் (மாமனார்) அபூகத்தாதா (ரலி) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்கு நான் தண்ணீர் கொண்டுவந்து (ஒரு பாத்திரத்தில்) ஊற்றினேன். அப்போது பூனை ஒன்று வந்து, அந்தத் தண்ணீரைக் குடிக்கலாயிற்று. உடனே அபூகத்தாதா (ரலி) அவர்கள், அந்தப் பூனை குடித்து முடிக்கும்வரை அந்தப் பாத்திரத்தைச் சரித்துப் பிடித்தார்கள்.

நான் அதை (வியப்புடன்) உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபூகத்தாதா (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகளே! (உளூச் செய்யும் தண்ணீரைப் பூனை குடிப்பதைக் கண்டு) நீ ஆச்சரியப்படுகிறாயா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். நான் ‘ஆம்’ என்றேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘பூனைகள் அசுத்தமான பிராணிகள் அல்ல. அவையெல்லாம் உங்களையே சுற்றிச் சுற்றி வரக்கூடியவை ஆகும்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

கப்ஷா பின்த் கஅப் (ரலி) அவர்கள் அபூகத்தாதா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார் என மாலிக் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டதாகச் சிலர் அறிவித்துள்ளனர்.(இது தவறாகும்)

அபூகத்தாதாவின் புதல்வருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார் என்பதே சரியான தகவலாகும்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், ஆயிஷா (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

பூனை வாய்வைப்பதால் தண்ணீர் அசுத்தமாகிவிடாது
என்பதே நபித்தோழர்களிலும், தாபிகளிலும் அவர்களுக்குப் பின்வந்த அறிஞர்களிலும் பெரும்பாலோரின் முடிவாகும். ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) போன்றோரின் முடிவும் இதுதான்.

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ்களில் இதுவே மிகவும் அழகான ஹதீஸாகும்.

மாலிக் (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸை சரியானது என்றே குறிப்பிடுகிறார்கள். மாலிக் (ரஹ்) அவர்களைவிட வேறு யாரும் இந்த ஹதீஸை முழுமையாக அறிவிக்கவில்லை.

 

(திர்மிதி: 92)

بَابُ مَا جَاءَ فِي سُؤْرِ الهِرَّةِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَتْ عِنْدَ ابْنِ أَبِي قَتَادَةَ،

أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا، قَالَتْ: فَسَكَبْتُ لَهُ وَضُوءًا، قَالَتْ: فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ، فَأَصْغَى لَهَا الإِنَاءَ حَتَّى شَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ يَا بِنْتَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ، أَوِ الطَّوَّافَاتِ»

وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَأَبِي هُرَيْرَةَ،: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ” وَهُوَ قَوْلُ أَكْثَرِ العُلَمَاءِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ: مِثْلِ الشَّافِعِيِّ، وَأَحْمَدَ، وَإِسْحَاقَ: لَمْ يَرَوْا بِسُؤْرِ الهِرَّةِ بَأْسًا، وَهَذَا أَحَسَنُ شَيْءٍ فِي هَذَا البَابِ «وَقَدْ جَوَّدَ مَالِكٌ هَذَا الحَدِيثَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، وَلَمْ يَأْتِ بِهِ أَحَدٌ أَتَمَّ مِنْ مَالِكٍ»


Tirmidhi-Tamil-85.
Tirmidhi-TamilMisc-85.
Tirmidhi-Shamila-92.
Tirmidhi-Alamiah-85.
Tirmidhi-JawamiulKalim-85.




மேலும் பார்க்க: அபூதாவூத்-75 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.