தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1973

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

1973. அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, நான் உரிமைபெற செலுத்தும் கடன்தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்! என்று கூறினார்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத்தந்த சில வார்த்தைகளை உனக்கு கற்றுத்தருகிறேன். (அதனை நீ அல்லாஹ்விடம் கேட்டால்) தய்யி கூட்டத்தின் மலையளவு கடன் இருந்தாலும் அந்தக்கடனை அல்லாஹ் நீக்குவான் என்று கூறிவிட்டு,

அல்லாஹும் மக்ஃபினீ பி ஹலாலிக்க அன் ஹராமிக்க, வ அஃக்னினீ பி ஃபள்லிக்க அம்மன் ஸிவாக்க என்பதைக் கூறு என்று கூறினார்கள்.

பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக

அறிவிப்பவர்: (ரஹ்)

அபூவாயில் (ரஹ்)

شقيق بن سلمة الأسدي

இறப்பு: ஹிஜ்ரி 100

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஷகீக் பின் ஸலமா

தந்தை பெயர்: ஸலமா

வம்சம்: அல்அஸதீ

புனைப்பெயர்: அபூவாயில்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரி 1

இறப்பு: ஹிஜ்ரி 100

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அபூவாயில் ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். அவர் ஹிஜ்ரி 1ல் பிறந்தார். அவர் நபி (ஸல்) அவர்களை அடைந்தவர், ஆனால் அவர்களைப் பார்க்கவில்லை.

அவர் கூஃபாவில் வசித்தார் மற்றும் வணக்கசாலிகளில் ஒருவராக இருந்தார். அவர் ஹிஜ்ரி 100ல் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூபக்ர் அஸ்ஸித்தீக் ரலி, உமர் பின் கத்தாப் ரலி, உஸ்மான் பின் அஃப்பான் ரலி, அலீ பின் அபூதாலிப் ரலி, முஆத் பின் ஜபல் ரலி, ஸஃத் பின் அபூவக்காஸ் ரலி, ஹுதைஃபா பின் அல்யமான் ரலி, இப்னு மஸ்ஊத் ரலி, ஸஹ்ல் பின் ஹுனைஃப் ரலி, கப்பாப் பின் அல்அரத் ரலி, கஅப் பின் உஜ்ரா ரலி, அபூமஸ்ஊத் அல் பத்ரீ ரலி

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): சுலைமான் அல்அஃமஷ், மன்சூர் பின் அல்மஃதமர், ஸுபைத் பின் அல்ஹாரிஸ், ஜாமிஉ பின் அபூராஷித், ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான், ஹபீப் பின் அபூதாபித், ஆஸிம் பின் அபூஅந்நஜூத், அப்தா பின் அபூலுபாபா, அம்ர் பின் முர்ரா, உஸ்மான் பின் ஆஸிம், அல்முகீரா பின் மக்ஸம், நுஐம் பின் அபூஹிந்த்

வேறு பெயர்கள்: ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ


ஆதாரம்: muslimscholars.info (11353) · Should verify


أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ عِصْمَةَ بْنِ إِبْرَاهِيمَ، ثنا أَبِي، ثنا يَحْيَى بْنُ يَحْيَى، أَنْبَأَ أَبُو مُعَاوِيَةُ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ الْقُرَشِيُّ، عَنْ سَيَّارٍ أَبِي الْحَكَمِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ:

جَاءَ رَجُلٌ إِلَى عَلِيٍّ، فَقَالَ: أَعِنِّي فِي مُكَاتَبَتِي، فَقَالَ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صَبِيرٍ دَيْنًا لَأَدَّاهُ اللَّهُ عَنْكَ قُلْ: «اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1973.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1907.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/570)

மேலும் பார்க்க: திர்மிதீ-3563 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.