தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23615

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

திஹ்பா அல்ஃகிஃபாரி (ரலி) அறிவிக்கிறார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருந்தளித்த ஏழைகளில் நானும் ஒருவனாக விருந்தில் கலந்து கொண்டேன். தமது விருந்தினரைக் கவனிக்க நபி (ஸல்) அவர்கள் வந்த போது நான் வயிற்றின் மீது (அதாவது குப்புற படுத்து) இருப்பதைப் பார்த்தார்கள். தமது காலால் என்னை உசுப்பி விட்டார்கள். நீ இவ்வாறு படுக்காதே! இது அல்லாஹ்வுக்குப் பிடிக்காத படுக்கும் முறையாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : திஹ்பாவின் மகன் யஈஷ்

(முஸ்னது அஹ்மத்: 23615)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ ابْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ يَعِيشَ بْنِ طِهْفَةَ الْغِفَارِيِّ، عَنْ أبيه، قَالَ:

ضِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَنْ تَضَيَّفَهُ مِنَ الْمَسَاكِينِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اللَّيْلِ يَتَعَاهَدُ ضَيْفَهُ، فَرَآنِي مُنْبَطِحًا عَلَى بَطْنِي فَرَكَضَنِي بِرِجْلِهِ، وَقَالَ: «لَا تَضْطَجِعْ هَذِهِ الضِّجْعَةَ، فَإِنَّهَا ضِجْعَةٌ يَبْغَضُهَا اللَّهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-25510.
Musnad-Ahmad-Shamila-23615.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22993.




  • இந்த செய்தி முழ்தரிப் ஆகும்.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நபித்தோழரின் பெயர் பல வகையாக வந்துள்ளது.

1. திخக்ஃபா பின் கைஸ், 2. திهஹ்ஃபா பின் கைஸ், 3. திஃغக்ஃபா பின் கைஸ்,

4. கைஸ் பின் திخக்ஃபா , 5. யஈஷ் பின் திخக்ஃபா, 6. அபூ திஃغக்ஃபா.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/462)

  • திஹ்பாவின் மகனிடமிருந்து இதைக் கேட்டு அறிவிப்பவர் முஹம்மத் பின் அம்ர் ஆவார். இவரைப் போலவே இன்னும் பலர் இந்த ஹதீஸை திஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும், இவரும் திஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இது தான் சரியானது. இவர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)  வழியாக அறிவிப்பதாக வருவது சரியான அறிவிப்பு அல்ல.
  • அப்படியானால் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் தானே பலவீனமானது? இந்த ஹதீஸ் பலவீனமானது அல்லவே? இந்த ஹதீஸின் படி குப்புறப்படுக்கக் கூடாது என்று கூறலாமா? என்ற கேள்வி எழலாம்.
  • ஆனால் இந்த ஹதீஸ் வேறு காரணங்களால் பலவீனமடைகின்றது. அதாவது இந்த ஹதீஸை அறிவிக்கும் பலர் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கின்றனர். எனவே இதில் இள்திராப் எனும் குழப்பம் அதிகமாக உள்ளது.

மேலும் பார்க்க: திர்மிதீ-2768 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.