ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் குழந்தைகளை வெறுக்காதீர்கள். உங்கள் துன்பங்களில் கைகொடுக்கின்ற இளகிய மனம் படைத்தவர்கள் அவர்கள். மிக மிக விலைமதிப்புமிக்கவர்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 17373)حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي عُشَّانَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَكْرَهُوا الْبَنَاتِ، فَإِنَّهُنَّ الْمُؤْنِسَاتُ الْغَالِيَاتُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17373.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17043.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ நினைவாற்றல் சரியில்லாதவர் என்ற அடிப்படையில் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். என்றாலும் இவரிடமிருந்து சில அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திகளை ஹதீஸ்கலை அறிஞர்கள் சரியானது எனக் கூறியுள்ளனர். அதனடிப்படையில் அப்துல்லாஹ் பின் வஹ்ப், அப்துல்லாஹ் பின் யஸீத், அப்துல்லாஹ் பின் முபாரக் போன்றோர் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது.
- அவ்வாறே குதைபா பின் ஸயீத், (இன்னும் சிலரும்) இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது. காரணம், நான் இப்னு லஹீஆ வின் ஹதீஸ்களை இப்னு வஹ்பின் நூல்களிலிருந்தும், இப்னு லஹீஆவின் சகோதரரின் மகனின் நூல்களிலிருந்தும் தான் எடுத்தெழுதி பின்பு அவரிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். அஃரஜின் ஹதீஸ்களைத் தவிர, என்று குதைபா பின் ஸயீத் கூறியுள்ளார். (நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512).
- ஆரம்பத்தில் இந்த செய்தியை பலவீனமானது என்று கூறிய அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் 20 வருடங்களுக்கு பிறகே மேற்கண்ட செய்தியை இப்னு லஹீஆ விடமிருந்து குதைபா அவர்கள் அறிவிக்கின்றார் என்பதால் சரியானதெனக் குறிப்பிடுகிறார். இதற்கு தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களின் கருத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார். (அஸ்ஸஹீஹா 3206 ) - குதைபா அவர்கள், இப்னு லஹீஆவிடமிருந்து அறிவிக்கும் செய்தி பற்றி தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் குறிப்பிட்டுள்ளார். (நூல்: ஸியரு அஃலாமுன் நுபலா 8/16, 17)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-17373 , அல்முஃஜமுல் கபீர்-856 , ஷுஅபுல் ஈமான்-8328 ,
- மேலும் இந்த செய்தி அல்ஹுஸைன் பின் ஹர்ப் அவர்களின் அல்பிர்ரு வஸ்ஸிலது என்ற நூலிலும், பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களின் ஷுஅபுல் ஈமான்-8328 எண்ணிலும் வேறு அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது. - மேலும் இந்த செய்தி சிறிது மாற்றத்துடன் அபுல் ஹஸன் அலீ பின் ஹர்ப் அவர்களின் நூலில், உர்வா பின் ஸுபைர் (ரஹ்) வழியாக முர்ஸலாக வந்துள்ளது.
சமீப விமர்சனங்கள்