நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது கைகளை வைப்பதற்கு முன் தனது மூட்டுக் கால்களை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(abi-yala-6540: 6540)حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِرُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ، وَلَا يَبْرُكْ بُرُوكَ الْفَحْلِ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-6540.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24616-அப்துல்லாஹ் பின் ஸயீத் என்பவர் பற்றி,
- இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர், விடப்பட்டவர் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
மற்றும் அம்ர் பின் அலீ ஆகியோர் கூறியுள்ளனர். - மதிப்பற்றவர் என்றும் இவருடைய ஹதீஸ்களைப் பதிவு செய்யப்படாது என்றும் யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.
- அபூஸுர்ஆ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும்,
- நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் நம்பகமானவர் இல்லை என்றும் கூறியுள்ளார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்:5, பக்கம்: 209)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: நஸாயீ-1091 .
சமீப விமர்சனங்கள்