அபூ உஸ்மான் (ரஹ்) கூறினார்:
நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களின் துணைவியாரும் அவர்களின் பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறை வைத்து எழுந்து தொழுது வந்தார்கள். முதலில் ஒருவர் எழுந்து தொழுவார்; மற்றவர்கள் தூங்குவர். தொழுதவர் மற்றொருவரை எழுப்பிவிட்டு தூங்குவிடுவார். அவர் தொழுது முடித்தவுடன் இன்னொருவரை தொழுகைக்கு எழுப்புவார்.
அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். எனக்கு ஏழு பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது. (அந்த நேரத்தில்) அந்தப் பழங்களிலேயே அதுதான் எனக்கு வியப்பளித்தது. மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.
மேலும் நான், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நீங்கள் மாத நோன்பை எவ்வாறு வைப்பீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், மாத ஆரம்பத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைப்பேன். எனக்கு (மரணம் போன்ற) ஏதேனும் ஏற்பட்டு விட்டால் முழு மாதத்தின் நன்மை கிடைத்துவிடும் என்று கூறினார்கள்.
(musnad-ishaq-ibn-rahawayh-13: 13)أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، نا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَبَّاسٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، قَالَ:
تَضَيَّفْتُ أَبَا هُرَيْرَةَ سَبْعًا، وَكَانَ هُوَ وَامْرَأَتُهُ وَخَادِمُهُ يَعْتَقِبُونَ اللَّيْلَ أَثْلَاثًا، يَقُومُ هَذَا وَيَنَامُ هَذَا، وَيَقُومُ هَذَا وَيَنَامُ هَذَا، وَسَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمْرًا فَأَصَابَنِي سَبْعَ تَمَرَاتٍ، فَكَانَ فِيهِ حَشَفَةٌ، مَا كَانَ شَيْءٌ أَحَبَّ إِلَيَّ مِنْهَا شَدَّتْ فِي مَضَاغِي،
قَالَ: سُلَيْمَانُ: أَيْ كَانَ لَهَا قُوَّةٌ،
قَالَ: فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ، فَكَيْفَ تَصُومُ الشَّهْرَ؟ فَقَالَ: أَصُومُ مِنْ أَوَّلِ الشَّهْرِ ثَلَاثًا، فَإِنْ حَدَثَ بِي حَدَثٌ كَانَ لِي أَجْرُ شَهْرِي
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Tamil-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-TamilMisc-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Shamila-13.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Alamiah-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-JawamiulKalim-11.
சமீப விமர்சனங்கள்