தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5411

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் சாப்பிட்டுவந்தவை.

 அபூஹுரைரா (ரலி) கூறினார்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒவ்வொரு மனிதருக்கும் ஏழு பேரீச்சம் பழங்களை வழங்கினார்கள். எனக்கும் ஏழு பேரீச்சம் பழங்கள் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத காய்ந்த) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது. அந்தப் பழங்களிலேயே அதுதான் எனக்கு வியப்பளித்தது. மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.

Book : 70

(புகாரி: 5411)

بَابُ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ يَأْكُلُونَ

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَبَّاسٍ الجُرَيْرِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

«قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَيْنَ أَصْحَابِهِ تَمْرًا، فَأَعْطَى كُلَّ إِنْسَانٍ سَبْعَ تَمَرَاتٍ، فَأَعْطَانِي سَبْعَ تَمَرَاتٍ إِحْدَاهُنَّ حَشَفَةٌ، فَلَمْ يَكُنْ فِيهِنَّ تَمْرَةٌ أَعْجَبَ إِلَيَّ مِنْهَا، شَدَّتْ فِي مَضَاغِي»


Bukhari-Tamil-5411.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5411.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இந்த கருத்தில் வரும் செய்திகளில் ஹம்மாத் பின் ஸைத் வழியாக வரும் செய்தி சரியானது. ஷுஃபா அவர்கள் வழியாக வரும் செய்திகளில் பேரித்தம்பழ எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளது என்பது மற்ற செய்திகளின்படி தெரிகிறது.

இந்தக் கருத்தில் அபூ ஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . அபூஉஸ்மான் —> அபூ ஹுரைரா (ரலி)

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-13 , அஹ்மத்-7965 , 8633 , 9373 , புகாரி-5411 , 5441 , 5442 , இப்னு மாஜா-4157 , திர்மிதீ-2474 , முஸ்னத் பஸ்ஸார்-9531 , குப்ரா நஸாயீ-6698 , முஸ்னத் அபீ யஃலா-6649 , 6653 , இப்னு ஹிப்பான்-4498 ,

2 . அப்துல்லாஹ் பின் ஷகீக் —> அபூ ஹுரைரா (ரலி)

பார்க்க: அஹ்மத்-8301 , ஹாகிம்-7079 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.