பாடம் : 2 மாதவிடாயிலிருக்கும் பெண்ணுக்கு மண விலக்கு அளிக்கப்பட்டாலும் அந்த மண விலக்கு நிகழ்ந்ததாகவே கருதப்படும்.4
அனஸ் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்து விட்டேன். ஆகவே/ இதுகுறித்து (என் தந்தை) உமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (உஙகள் புதல்வா) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! என்று கூறினார்கள். அறிவிப்பாளார் அனஸ்பின் சீன் (ரஹ்) அவர்கள் தொடாந்து கூறுகின்றார்கள்: நான் இப்னு உமா (ரலி) அவர்களிடம் (மாதவிடாயின்போது சொல்லப்பட்ட இந்த தலாக்) ஒரு தலாக்காகக் கருதப்படுமா என்று கேட்டேன். அதற்கு இப்னு உமா (ரலி) அவர்கள் (தலாக்காகக் கருதப்படாமல்) வேறென்ன என்று கேட்டார்கள். இப்னு உமா (ரலி) அவர்களிடமிருந்து யூனுஸ் பின் ஜுபை (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள தகவலில் (பின்வருமாறு) காணப்படுகிறது: நபி (ஸல்) அவர்கள் உமா (ரலி) அவர்களிடம் (உஙகள் புதல்வா) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு அவருக்கு நீங்கள் கட்டளையிடுங்கள் என்று கூறினார்கள். நான் இப்னு உமா (ரலி) அவாகளிடம் (மாதவிடாய்ப் பருவத்தில்) செய்யப்பட்ட இந்த மணவிலக்கு) மணவிலக்காகக் கருதப்படுமா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்து விட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன என்று கேட்டாகள்.
Book : 68
(புகாரி: 5252)بَابُ إِذَا طُلِّقَتِ الحَائِضُ تَعْتَدُّ بِذَلِكَ الطَّلاَقِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، قَالَ
طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِيُرَاجِعْهَا» قُلْتُ: تُحْتَسَبُ؟ قَالَ: فَمَهْ؟ وَعَنْ قَتَادَةَ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا» قُلْتُ: تُحْتَسَبُ؟ قَالَ: أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ
சமீப விமர்சனங்கள்