தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5252

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

மாதவிடாயிலிருக்கும் பெண்ணுக்கு மணவிலக்கு அளிக்கப்பட்டாலும், அந்த மணவிலக்கு நிகழ்ந்ததாகவே கருதப்படும்.

5252. அனஸ் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமா் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்து விட்டேன். ஆகவே இது குறித்து (என் தந்தை) உமா் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (உங்கள் புதல்வா்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.


அறிவிப்பாளார் அனஸ் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் தொடா்ந்து கூறுகின்றார்கள்: நான் இப்னு உமா் (ரலி) அவர்களிடம் (மாதவிடாயின்போது சொல்லப்பட்ட இந்த தலாக்) தலாக்காகக் கருதப்படுமா? என்று கேட்டேன். அதற்கு இப்னு உமா் (ரலி) அவர்கள் (தலாக்காகக் கருதப்படாமல்) வேறென்ன என்று கேட்டார்கள்.


இப்னு உமா் (ரலி) அவர்களிடமிருந்து யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள தகவலில் (பின்வருமாறு) காணப்படுகிறது:

நபி (ஸல்) அவர்கள் உமா் (ரலி) அவர்களிடம் (உங்கள் புதல்வா்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு அவருக்கு நீங்கள் கட்டளையிடுங்கள் என்று கூறினார்கள்.

நான் இப்னு உமா் (ரலி) அவா்களிடம் (மாதவிடாய்ப் பருவத்தில்) செய்யப்பட்ட இந்த மணவிலக்கு) மணவிலக்காகக் கருதப்படுமா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்து விட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன என்று கேட்டார்கள்.

அத்தியாயம்: 68

(புகாரி: 5252)

بَابُ إِذَا طُلِّقَتِ الحَائِضُ تَعْتَدُّ بِذَلِكَ الطَّلاَقِ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، قَالَ

طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِيُرَاجِعْهَا» قُلْتُ: تُحْتَسَبُ؟ قَالَ: فَمَهْ؟
وَعَنْ قَتَادَةَ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا» قُلْتُ: تُحْتَسَبُ؟ قَالَ: أَرَأَيْتَ إِنْ عَجَزَ وَاسْتَحْمَقَ


Bukhari-Tamil-5252.
Bukhari-TamilMisc-5252.
Bukhari-Shamila-5252.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.