தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5297

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மக்கா வெற்றியின்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம். (அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றிருந்தார்கள்.) சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கிச் சென்று எனக்காக மாவு கரைப்பீராக!’ என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!’ என்றார். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!’ என்று (மீண்டும்) கூறினார்கள். அதற்கவர், ‘பகல்(வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே, இறைத்தூதர் அவர்களே!’ என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக’ என்று கூறினார்கள்.

மூன்றாம் முறையில் அவர் இறங்கிவந்து நபி(ஸல்) அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்தி (நோன்பு திறந்து)விட்டுத் தம் கையால் கிழக்கு நோக்கி சைகை செய்தவாறு, ‘நீங்கள் (ம்ழக்குத் திசையான) இங்கிருந்து இரவு முன்னோக்கி வந்துவிடக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்திட வேண்டும்’ என்று கூறினார்கள்.

Book :68

(புகாரி: 5297)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الحَمِيدِ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ

كُنَّا فِي سَفَرٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ، قَالَ لِرَجُلٍ: «انْزِلْ فَاجْدَحْ لِي» قَالَ: يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمْسَيْتَ، ثُمَّ قَالَ: «انْزِلْ فَاجْدَحْ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمْسَيْتَ، إِنَّ عَلَيْكَ نَهَارًا، ثُمَّ قَالَ: «انْزِلْ فَاجْدَحْ» فَنَزَلَ فَجَدَحَ لَهُ فِي الثَّالِثَةِ، فَشَرِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَوْمَأَ بِيَدِهِ إِلَى المَشْرِقِ، فَقَالَ: «إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.