தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1956

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 44

ஒருவர் தம்மால் இயன்ற தண்ணீர் மற்றும் அது போன்றவற்றால் நோன்பு துறப்பது.

 அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம். ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!’ என்றார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! மாலைநேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!’ என்றார்.

நபி (ஸல்) அவர்கள், ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!’ என்றார்கள். அதற்கவர், ‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!’ என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார்.

பின்னர், ‘நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!’ என்று தம் விரலால் கிழக்கே சுட்டிக் காட்டிக் கூறினார்கள்.

அத்தியாயம்: 30

(புகாரி: 1956)

بَابٌ: يُفْطِرُ بِمَا تَيَسَّرَ مِنَ المَاءِ، أَوْ غَيْرِهِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ سُلَيْمَانُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ صَائِمٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمْسَيْتَ؟ قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ عَلَيْكَ نَهَارًا، قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا»، فَنَزَلَ فَجَدَحَ ثُمَّ قَالَ: «إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ أَقْبَلَ مِنْ هَا هُنَا، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ» وَأَشَارَ بِإِصْبَعِهِ قِبَلَ المَشْرِقِ


Bukhari-Tamil-1956.
Bukhari-TamilMisc-1956.
Bukhari-Shamila-1956.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஇஸ்ஹாக் ஷைபானீ —> அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, புகாரி-1941, 1955, 1956, 1958, 5297, முஸ்லிம்-, அபூதாவூத்-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, குப்ரா பைஹகீ-,


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2355,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.