நபி (ஸல்) அவர்கள் ‘உணவு உண்ட பின்’ அல்லது ‘தம் உணவு விரிப்பை எடுக்கும் போது’ ‘அல்ஹம்துலில்லாஹி கபாஃனா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூர்’ என்று கூறுவார்கள்.
(பொருள்: எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, எங்களின் தாகம் தணித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது. இப்புகழ் முற்றுப் பெறாதது; மறுக்க முடியாதது ஆகும்.)
சில வேளைகளில், “அல்ஹம்து லில்லாஹி ரப்பினா, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் ரப்பனா’ என்று கூறுவார்கள்.
(பொருள்: எங்கள் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது. எங்கள் இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க இயலாதது ஆகும்.)
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
அத்தியாயம்: 70
(புகாரி: 5459)حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ – وَقَالَ مَرَّةً: إِذَا رَفَعَ مَائِدَتَهُ – قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ» وَقَالَ مَرَّةً: «الحَمْدُ لِلَّهِ رَبِّنَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى، رَبَّنَا»
Bukhari-Tamil-5459.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5459.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்