பாடம்: 4
அதீரா (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பிராணிகளைப் பலியிடல்.)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இனி), தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச்செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அறியாமைக் கால) மக்களுடைய (ஆடு ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டியே “ஃபரஉ” ஆகும்; அதை அம்மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாள்களி)ல் பலியிடப்படும் பிராணி “அதீரா” வாகும்.
அத்தியாயம்: 71
(புகாரி: 5474)بَابُ العَتِيرَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ: حَدَّثَنَا عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لاَ فَرَعَ وَلاَ عَتِيرَةَ»
قَالَ: ” وَالفَرَعُ: أَوَّلُ نِتَاجٍ كَانَ يُنْتَجُ لَهُمْ، كَانُوا يَذْبَحُونَهُ لِطَوَاغِيَتِهِمْ، وَالعَتِيرَةُ فِي رَجَبٍ
Bukhari-Tamil-5474.
Bukhari-TamilMisc-5474.
Bukhari-Shamila-5474.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . இப்னுல் மதீனீ-அலீ பின் அப்துல்லாஹ்
3 . ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா
4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்
5 . ஸயீத் பின் முஸய்யிப் பின் ஹஸ்ன்
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்
மேலும் பார்க்க: புகாரி-5473.
சமீப விமர்சனங்கள்