1272. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்துகள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்)
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ عَلَيْهِ السَّلَام،
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الْعَصْرِ رَكْعَتَيْنِ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1080.
Abu-Dawood-Shamila-1272.
Abu-Dawood-Alamiah-1080.
Abu-Dawood-JawamiulKalim-1081.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . ஹஃப்ஸ் பின் உமர்
3 . ஷுஅபா
4 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ
5 . ஆஸிம் பின் ளம்ரா
6 . அலீ பின் அபூதாலிப் (ரலி)
இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்கள் வழியாக ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஃப்ஸ் பின் உமர் அஸரின் முன் சுன்னத் தொழுகையை “2 ரக்அத்” என்று அறிவித்துள்ளார். இது ஷாத் என்பதால் பலவீனமானது.
ஏனெனில் அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களும், ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் “4 ரக்அத்” என்றே அறிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க: அஹ்மத்-650.
சமீப விமர்சனங்கள்