ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியான தொழுகைகள் பற்றிக் கூறுங்கள்” என்று கேட்டோம். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அதை நீங்கள் தாங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள். நாங்கள், “அதிலிருந்து எங்களால் முடிந்ததை எடுத்துக்கொள்வதற்காகவாவது எங்களுக்கு அதை அறிவியுங்கள்” என்றோம்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுவிட்டு சிறிது நேரம் பொறுத்திருப்பார்கள். கிழக்குத் திசையில் சூரியன் இந்த அளவுக்கு (உதித்து) வரும்போது – (அதாவது மேற்கு திசையில் அஸருடைய நேரத்தின் அளவுக்கு வரும்போது) – எழுந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.
பிறகு, சிறிது நேரம் பொறுத்திருப்பார்கள். கிழக்குத் திசையில் சூரியன் இந்த அளவுக்கு (உயர்ந்து) வரும்போது – (அதாவது மேற்குத் திசையில் ளுஹருடைய நேரத்தின் அளவுக்கு உயரும்போது) – எழுந்து நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள்.
மேலும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் ளுஹர் தொழுகைக்கு முன்னால் நான்கு ரக்அத்துகளும், அதற்குப் பின்னால் இரண்டு ரக்அத்துகளும் தொழுவார்கள்.
அஸர் தொழுகைக்கு முன்னால் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை இரண்டாக பிரிப்பார்கள்” என்று கூறினார்கள்.
தொடர்ந்து அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: “இவையே நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியாக தொழும் பதினாறு ரக்அத் தொழுகைகளாகும். இதைத் தொடர்ந்து நிறைவேற்றுபவர்கள் மிகக் குறைவானவர்களே!
வகீஉ பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் தனது தந்தை ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்:
அபூஇஸ்ஹாக் அவர்கள் இதை ஹபீப் பின் அபூஸாபித் அவர்களுக்கு அறிவித்தபோது அவர், “அபூஇஸ்ஹாக் அவர்களே! உங்களது இந்த ஹதீஸ் உங்களது பள்ளிவாசல் நிரம்பத் தங்கம் இருப்பதற்கு சமமானது” என்று கூறினார்.
(முஸ்னது அஹ்மத்: 650)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، وَإِسْرَائِيلُ، وَأَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، قَالَ:
سَأَلْنَا عَلِيًّا، عَنْ تَطَوُّعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ، فَقَالَ: إِنَّكُمْ لَا تُطِيقُونَهُ. قَالَ: قُلْنَا: أَخْبِرْنَا بِهِ نَأْخُذْ مِنْهُ مَا أَطَقْنَا. قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْفَجْرَ أَمْهَلَ، حَتَّى إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا – يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ – مِقْدَارُهَا مِنْ صَلاةِ الْعَصْرِ مِنْ هَاهُنَا مِنْ قِبَلِ الْمَغْرِبِ، قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ يُمْهِلُ حَتَّى إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا، – يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ – مِقْدَارُهَا مِنْ صَلاةِ الظُّهْرِ مِنْ هَاهُنَا – يَعْنِي مِنْ قِبَلِ الْمَغْرِبِ – قَامَ فَصَلَّى أَرْبَعًا، وَأَرْبَعًا قَبْلَ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَأَرْبَعًا قَبْلَ الْعَصْرِ، يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلائِكَةِ الْمُقَرَّبِينَ، وَالنَّبِيِّينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُؤْمِنِينَ، وَالْمُسْلِمِينَ»
قَالَ: قَالَ عَلِيٌّ: تِلْكَ سِتَّ عَشْرَةَ رَكْعَةً، تَطَوُّعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ، وَقَلَّ مَنْ يُدَاوِمُ عَلَيْهَا
حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ: حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ لأَبِي إِسْحَاقَ، حِينَ حَدَّثَهُ يَا أَبَا إِسْحَاقَ، «يَسْوَى حَدِيثُكَ هَذَا مِلْءَ مَسْجِدِكَ ذَهَبًا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-615.
Musnad-Ahmad-Shamila-650.
Musnad-Ahmad-Alamiah-615.
Musnad-Ahmad-JawamiulKalim-635.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். மேற்கண்ட செய்தி விரிவானதாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . வகீஃ பின் ஜர்ராஹ்
3 . ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
4 . இஸ்ராயீல் பின் யூனுஸ், 5 . ஜர்ராஜ் பின் மலீஹ்.
6 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ
7 . ஆஸிம் பின் ளம்ரா
8 . அலீ பின் அபூதாலிப் (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20412-ஆஸிம் பின் ளம்ரா என்பவரை ஜவ்ஸஜானி, இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்றோர் விமர்சனம் செய்திருந்தாலும் அது சரியானதல்ல என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் விளக்கியுள்ளார்.
இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதால் மேற்கண்ட செய்தி ஹஸன் தர செய்தியாகும்.
பார்க்க: ராவிபெயர்-ஆஸிம் பின் ளம்ரா.
இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் வழியாக அறிவிக்கும் ஹஃப்ஸ் பின் உமர் அஸரின் முன் சுன்னத் தொழுகையை “2 ரக்அத்” என்று அறிவித்துள்ளார். அது ஷாத் என்பதால் பலவீனமானது. (பார்க்க: அபூதாவூத்-1272…)
இவ்வாறே அபூஅவானா அவர்கள் வழியாக அறிவிக்கும் சிலர் இந்தச் செய்தியில் “இரவில் தொழும் உபரியான தொழுகை” பற்றி கேட்டதாக அறிவித்துள்ளனர். இதுவும் ஷாத் ஆகும்.
(நூல்கள்: அவ்ஹாமுல் முஹத்திஸீன்-9/410, 411, அல்ஜாமிஉ ஃபில்இலல்-5/150)
நாம் பார்த்தவரை ஆஸிம் பின் ளம்ரா பற்றி இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர் என்பதால் இந்தச் செய்தி பலவீனமானது என்றும் சிலர் கூறியுள்ளனர்.
ஆஸிம் பின் ளம்ராவின் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்ல. சிலவை சரியாக உள்ளன என்று கூறுவோர் இதை சரியானது என்றும் ஹஸன் தரத்தில் அமைந்த செய்தி என்றும் கூறியுள்ளனர்.
- இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்கள் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார். இதில் இடம்பெறும் ஆஸிம் பின் ளம்ரா என்பதால் அல்ல. இந்தச் செய்தி போன்று வேறு யாரும் அறிவிக்கவில்லை என்பதால் தான் இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்கள் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார் என திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார். - ஹபீப் பின் அபூஸாபித் எனும் தாபிஈ இதை சரியான செய்தி என்று பாராட்டியுள்ளார். (இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ளது போன்று வித்ர் பற்றி ஹாரிஸ் அறிவிக்கும் செய்தியை ஹபீப் பாராட்டவில்லை) - ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், நாங்கள் ஹாரிஸ் அல்அஃவரின் செய்தியைவிட ஆஸிம் பின் ளம்ரா வின் செய்திக்கு சிறப்பு உள்ளதை அறிவோம் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜாமிஉ ஃபில்இலல்-5/150, …)
1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஇஸ்ஹாக் —> ஆஸிம் பின் ளம்ரா —> அலீ (ரலி)
பார்க்க: அஹ்மத்-650, 885, 1208, 1258, 1375, இப்னு மாஜா-1161, அபூதாவூத்-1272, திர்மிதீ-424, 429, 598, 599, நஸாயீ-874, 875, …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1271, அல்முஃஜமுல் அவ்ஸத்-2580, புகாரி-835,
மற்ற சுன்னத்தான தொழுகைகள் பற்றிய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1319,
அஸ்ஸலாமு அலைக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸை ஆய்வு செய்து விரிவான தகவல்களை சேகரித்து தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரா.
திர்மிதீ 429 வது ஹதீஸும் இதே போன்று ஹஸன் தரத்தில் அமைந்த செய்திதானா? அதன் தலைப்பில் “ஹதீஸின் தரம் ஆய்வில் உள்ளது” என்று உள்ளதால் கேட்கிறேன் ஜீ
வ அலைக்கும் ஸலாம்.
இதனுடன் சேர்ந்த ஹதீஸ்களை இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாக பார்க்கும் போது முழுமைபடுத்துகிறோம். திர்மிதீ 429 ஹதீஸை நாம் முன்பு அசல் ஹதீஸாக வைத்திருந்தோம். அதைவிட அஹ்மத் 650 ஹதீஸ் முழுமையானது என்பதால் இதை அசல் ஹதீஸாக வைத்துள்ளோம். மற்றபடி இரண்டின் அசல் அறிவிப்பாளர்தொடர் ஒன்றே.
ஜஸாக்கல்லாஹ் ஹைரா.. ஜீ