பாடம் : 150
அத்தஹிய்யாத்துக்குப் பின் (சலாம் கொடுப் பதற்கு முன்) விரும்பிய பிரார்த்தனை செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அது கட்டாயம் கிடையாது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்போது ‘அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டுமாக’ என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டுமாக என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாமாக இருக்கிறான்.
எனினும் ‘காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்’ என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும்.
‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறுங்கள். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம்: 10
(புகாரி: 835)بَابُ مَا يُتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ بَعْدَ التَّشَهُّدِ وَلَيْسَ بِوَاجِبٍ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:
كُنَّا إِذَا كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ، قُلْنَا: السَّلاَمُ عَلَى اللَّهِ مِنْ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تَقُولُوا السَّلاَمُ عَلَى اللَّهِ، فَإِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، وَلَكِنْ قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمْ أَصَابَ كُلَّ عَبْدٍ فِي السَّمَاءِ أَوْ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ، فَيَدْعُو
Bukhari-Tamil-835.
Bukhari-TamilMisc-835.
Bukhari-Shamila-835.
Bukhari-Alamiah-791.
Bukhari-JawamiulKalim-794.
சமீப விமர்சனங்கள்