நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவில் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத் இருப்பில்) அமர்ந்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும். என்றாலும் அபூஉபைதா (ரஹ்) அவர்கள், தனது தந்தையான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து, நேரடியாக எந்த ஹதீஸையும் செவியேற்கவில்லை.
மேற்கண்ட நபிமொழியின்படியே செயல்படவேண்டும் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் அமரக்கூடாது; அத்தஹிய்யாத் துஆவை விட வேறெதையும் கூடுதலாக ஓதக்கூடாது என்பது இவர்களின் கருத்தாகும்.
ஒருவர் அத்தஹிய்யாத் துஆவை விட வேறெதையும் கூடுதலாக ஓதினால் அவர் மறதிக்கான இரு ஸஜ்தா செய்வது அவசியம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
(திர்மிதி: 366)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ هُوَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ، إِلَّا أَنَّ أَبَا عُبَيْدَةَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ»
وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ: يَخْتَارُونَ أَنْ لَا يُطِيلَ الرَّجُلُ القُعُودَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ، وَلَا يَزِيدَ عَلَى التَّشَهُّدِ شَيْئًا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ،
وَقَالُوا: إِنْ زَادَ عَلَى التَّشَهُّدِ فَعَلَيْهِ سَجْدَتَا السَّهْوِ، هَكَذَا رُوِيَ عَنِ الشَّعْبِيِّ وَغَيْرِهِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-334.
Tirmidhi-Shamila-366.
Tirmidhi-Alamiah-334.
Tirmidhi-JawamiulKalim-334.
- இந்தச் செய்தியைப் பதிவு செய்த திர்மிதீ இமாம் அவர்களே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தி-முன்கதிஃ என்பதை இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் கூறியுள்ளார்கள். காரணம் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து, அவர்களின் மகன் அபூஉபைதா (ரஹ்) அவர்கள் எந்த ஹதீஸையும் கேட்கவில்லை.
(நூல்: தஹ்தீபுல் கமால்-14/61)
1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-3656 , 4074 , 4155 , 4388 , 4389 , 4390 , அபூதாவூத்-995 , திர்மிதீ-366 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-1176 , முஸ்னத் அபீ யஃலா-, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-835 .
சமீப விமர்சனங்கள்