தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-831

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 148

கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்’ ஓதுவது. 

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

நாங்கள்நபி (ஸல்) அவர்களின் பின்னால் தொழும்போது ‘அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல், வ மீகாயீல், அஸ்ஸலாமு அலா ஃபுலான்’ என்று கூறுபவர்களாக இருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, ‘நிச்சயமாக அல்லாஹ் தான் ‘ஸலாம்’ ஆக இருக்கிறான்.

உங்களில் ஒருவர் தொழும்போது ‘காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீது அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்’ என்று கூறட்டும்.

இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியதாக அமையும்.

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றும் கூறட்டும்’ எனக் கூறினார்கள்.

அத்தியாயம்: 10

(புகாரி: 831)

بَابُ التَّشَهُّدِ فِي الآخِرَةِ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ

كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْنَا: السَّلاَمُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ:  إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، فَإِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَقُلْ: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمُوهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ


Bukhari-Tamil-831.
Bukhari-TamilMisc-831.
Bukhari-Shamila-831.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-831, 835, 1202, 6230, 6328, 7381, முஸ்லிம்-, இப்னு மாஜா-, அபூதாவூத்-, முஸ்னத் பஸ்ஸார்-, நஸாயீ-, …


அபூதாவூத்-970,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.