தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-599

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ஹதீஸ் எண்-588 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

நபி (ஸல்) அவர்கள் பகலில் தொழுத உபரித் தொழுகை குறித்து அறிவிக்கப்பட்ட செய்திகளில், இதுவே மிகச் சிறந்ததாகும் என்று இஸ்ஹாக் பின் இப்ராஹிம்-இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள் கூறினார்.

இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை பலவீனமானது எனக் கூறினார். அவர் ஏன் அப்படி கூறினார் என்றால் (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) இந்த ஹதீஸ் ஆஸிம் பின் ளம்ரா —> அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளது. வேறு எந்த வழியிலும் இது அறிவிக்கப்படவில்லை. எனினும், சில ஹதீஸ்துறை அறிஞர்கள் ஆஸிம் பின் ளம்ராவை நம்பகமானவர் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அலீ பின் மதீனி (ரஹ்) கூறினார்:

“ஹாரிஸ் என்பவரின் ஹதீஸை விட ஆஸிம் பின் ளம்ராவின் ஹதீஸ் சிறந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்” என்று ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் கூறினார் என யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் கூறினார்.

(திர்மிதி: 599)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ،

نَحْوَهُ،

«هَذَا حَدِيثٌ حَسَنٌ» وقَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ: «أَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي تَطَوُّعِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّهَارِ»هَذَا
وَرُوِي عَنِ ابْنِ المُبَارَكِ، «أَنَّهُ كَانَ يُضَعِّفُ هَذَا الحَدِيثَ»، «وَإِنَّمَا ضَعَّفَهُ عِنْدَنَا – وَاللَّهُ أَعْلَمُ – لِأَنَّهُ لَا يُرْوَى مِثْلُ هَذَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، وَعَاصِمُ بْنُ ضَمْرَةَ هُوَ ثِقَةٌ عِنْدَ بَعْضِ أَهْلِ الْحَدِيثِ»
قَالَ عَلِيُّ بْنُ المَدِينِيِّ: قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ القَطَّانُ قَالَ سُفْيَانُ: «كُنَّا نَعْرِفُ فَضْلَ حَدِيثِ عَاصِمِ بْنِ ضَمْرَةَ عَلَى حَدِيثِ الحَارِثِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-544.
Tirmidhi-Shamila-599.
Tirmidhi-Alamiah-544.
Tirmidhi-JawamiulKalim-544.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் முஸன்னா

3 . முஹம்மத் பின் ஜஅஃபர்

4 . ஷுஅபா

5 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

6 . ஆஸிம் பின் ளம்ரா

7 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


மேலும் பார்க்க: அஹ்மத்-650.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.