தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-874

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அஸர் தொழுகைக்கு முன்னுள்ள தொழுகையும், அது குறித்து அபூஇஸ்ஹாக் வழியாக அறிவித்தவர்களின் அறிவிப்புகளில் காணப்படும் முரண்பாடும்.

ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களில் யாரால் அதைப் போன்று தொழ முடியும்?” என்று கேட்டார்கள். நாங்கள், “அதனை நாங்கள் முழுமையாகச் செய்ய முடியாவிட்டாலும், அதனைப் பற்றிச் செவியுற்றுக் கொள்கிறோம்” என்று கூறினோம்.

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் சூரியன் அஸர் நேரத்தின்போது எந்த நிலையில் இருக்குமோ, அந்த நிலையில் காலை நேரத்தில் இருந்தால் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

மேலும், சூரியன் லுஹர் நேரத்தின்போது எந்த நிலையில் இருக்குமோ, அந்த நிலையில் முற்பகல் நேரத்தில் இருந்தால் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்.

அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களும், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களும் தொழுவார்கள்.

அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், நபிமார்கள், அவர்களைப் பின்பற்றிய முஃமின்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு ஸலாம் கூறுவதின் மூலம் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களையும் பிரிப்பார்கள்.

(நஸாயி: 874)

الصَّلَاةُ قَبْلَ الْعَصْرِ وَذِكْرُ اخْتِلَافِ النَّاقِلِينَ عَنْ أَبِي إِسْحَاقَ فِي ذَلِكَ

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ قَالَ:

سَأَلْنَا عَلِيًّا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَيُّكُمْ يُطِيقُ ذَلِكَ؟ قُلْنَا: إِنْ لَمْ نُطِقْهُ سَمِعْنَا. قَالَ: «كَانَ إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَا هُنَا كَهَيْئَتِهَا مِنْ هَا هُنَا عِنْدَ الْعَصْرِ صَلَّى رَكْعَتَيْنِ، فَإِذَا كَانَتْ مِنْ هَا هُنَا كَهَيْئَتِهَا مِنْ هَا هُنَا عِنْدَ الظُّهْرِ صَلَّى أَرْبَعًا، وَيُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا ثِنْتَيْنِ، وَيُصَلِّي قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِتَسْلِيمٍ عَلَى الْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ وَالنَّبِيِّينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-864.
Nasaayi-Shamila-874.
Nasaayi-Alamiah-864.
Nasaayi-JawamiulKalim-864.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . இஸ்மாயீல் பின் மஸ்ஊத்

3 . யஸீத் பின் ஸுரைஃ

4 . ஷுஅபா

5 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

6 . ஆஸிம் பின் ளம்ரா

7 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


மேலும் பார்க்க: அஹ்மத்-650.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.