தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-429

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை பிரிப்பார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் இப்னு உமர் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. அலீ (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் ஹஸன் தரத்தில் அமைந்ததாகும்.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், அஸருக்கு முன் தொழப்படும் நான்கு ரக்அத்களை இரண்டிரண்டாக பிரிக்கக்கூடாது என்று கூறுகிறார். இதற்கும் இந்த ஹதீஸையே ஆதாரமாக காட்டுகிறார். “ஒவ்வொரு இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் ஸலாம் கூறிப் பிரிப்பார்கள்” என்பதன் பொருள், இரண்டு ரக்அத்களுக்குப் பிறகு அத்தஹிய்யாத்-தஷஹ்ஹுத் இருப்பதே என்றும் அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்.

ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் (ரஹ்) ஆகிய இருவரும், பகல் மற்றும் இரவுத் நேரத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகப் பிரித்துத் தொழவேண்டும் என்ற கருத்தில் உள்ளார்கள்.

(திர்மிதி: 429)

حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ:

«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلَائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ»

وَفِي البَابِ عَنْ ابْنِ عُمَرَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: «حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ، وَاخْتَارَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَنْ لَا يُفْصَلَ فِي الأَرْبَعِ قَبْلَ العَصْرِ وَاحْتَجَّ بِهَذَا الحَدِيثِ» وقَالَ: وَمَعْنَى أَنَّهُ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ، يَعْنِي: التَّشَهُّدَ «،» وَرَأَى الشَّافِعِيُّ، وَأَحْمَدُ: صَلَاةَ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى يَخْتَارَانِ الفَصْلَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-394.
Tirmidhi-Shamila-429.
Tirmidhi-Alamiah-394.
Tirmidhi-JawamiulKalim-394.




இது சுருக்கமான செய்தி.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் பஷ்ஷார்-புந்தார்

3 . அப்துல்மலிக் பின் அம்ர்-அபூஆமிர்

4 . ஸுஃப்யான் ஸவ்ரீ

5 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

6 . ஆஸிம் பின் ளம்ரா

7 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


 


மேலும் பார்க்க: அஹ்மத்-650.

7 comments on Tirmidhi-429

  1. அஸ்ஸலாமு அலைக்கும். திர்மிதீ 429 வது ஹதீஸான இந்த செய்தியின் தரம் பற்றிய விபரங்கள் கிடைக்குமா?

    1. வ அலைக்கும் ஸலாம். இன்ஷா அல்லாஹ் சில விவரங்களைச் சேர்த்தபின்பு தரத்தை பதிவு செய்கிறோம்.

    1. வஅலைக்குமுஸ்ஸலாம். இன்ஷா அல்லாஹ் பார்க்கிறோம். ஜஸாக்கல்லாஹ் ஹைரா.. ஜீ

  2. இப்னு ரஜப் அல்-ஹன்பலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:
    “தலைவலி என்பது ஈமான் (நம்பிக்கை) மற்றும் ஜன்னா (சொர்க்கம்) மக்களின் அடையாளங்கள்.
    [லதாயிஃப் அல்-மாரிஃப், பக்கம் 153]. இப்படி ஒன்னு இருக்க பாய்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இப்னு ரஜப் அல்ஹன்பலி என்பவர் ஹிஜ்ரி 736 இல் பிறந்து ஹிஜ்ரி 790 இல் மரணித்த ஒரு ஹதீஸ்துறை அறிஞர் ஆவார். இவர் நபித்தோழர் அல்ல. நீங்கள் ரலி என்று குறிப்பிட்டுள்ளதால் இதைக் கூறுகிறோம்.

      لطائف المعارف فيما لمواسم العام من الوظائف (ص105 ط ابن حزم):
      وصداع الرأس من علامات أهل الإيمان وأهل الجنة – “தலைவலி என்பது நம்பிக்கை கொண்டோர், மற்றும் (மறுமையில்) சொர்க்கம் பெறுவோரின் அடையாளங்கள்”. இது தான் அவர் கூறியுள்ள வாக்கியம்.

      وقد رُوِي عن النبي صلى الله عليه وسلم أنَّه وَصفَ أَهْلَ النَّارِ فقال: “هُم الذينَ لا يألمون رُؤوسَهم”. ودَخَلَ عليه أعرابيٌّ، فقال له: “يا أعرابي! هَلْ أَخذَكَ هذا الصُّداعُ؟ “، فقال: وما الصداعُ؟ قال: “عُروقٌ تَضرِبُ على الإنسانِ في رأسِهِ “، فقال: ما وجدْتُ هذا. فلمَّا وَلَّى الأعرابيّ، قال النبيُّ صلى الله عليه وسلم: “مَنْ أَحَبّ أَنْ يَنْظُرَ إلى رَجُل مِن أهلِ النارِ فَلْيَنْظُرْ إلى هذا”. خرَّجه الإِمامُ أحمدُ، والنسائيُّ

      இதை அவர், அஹ்மத்-8395 இல் வரும் ஹதீஸின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.