தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-1208

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியான தொழுகைகள் பற்றிக் கூறுங்கள்” என்று கேட்டோம்.

அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் உபரியாக தொழும் தொழுகைகள் பதினாறு ரக்அத்களாகும். இதைத் தொடர்ந்து நிறைவேற்றுபவர்கள் மிகக் குறைவானவர்களே! என்று கூறினார்கள்.


வகீஉ பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் தனது தந்தை ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்:

அபூஇஸ்ஹாக் அவர்கள் இதை ஹபீப் பின் அபூஸாபித் அவர்களுக்கு அறிவித்தபோது அவர், “அபூஇஸ்ஹாக் அவர்களே! உங்களது இந்த ஹதீஸ் உங்களது பள்ளிவாசல் நிரம்பத் தங்கம் இருப்பதற்கு சமமானது” என்று கூறினார்.

(முஸ்னது அஹ்மத்: 1208)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، وَأَبُو خَيْثَمَةَ، قَالا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، ح قَالَ عَبْدُ اللَّهِ: وحَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، وَإِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، قَالَ:

سَأَلْنَا عَلِيًّا عَنْ تَطَوُّعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ، قَالَ: قَالَ عَلِيٌّ: «تِلْكَ سِتَّ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ» ، وَقَلَّ مَنْ يُدَاوِمُ عَلَيْهَا ،

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَي أَبِي حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: وَقَالَ أَبِي: قَالَ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ: «يَا أَبَا إِسْحَاقَ مَا أُحِبُّ أَنَّ لِي بِحَدِيثِكَ هَذَا مِلْءَ مَسْجِدِكَ هَذَا ذَهَبًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-1145.
Musnad-Ahmad-Shamila-1208.
Musnad-Ahmad-Alamiah-1145.
Musnad-Ahmad-JawamiulKalim-1166.




இது சுருக்கமான செய்தி.


இந்தச் செய்தியின் 3 அறிவிப்பாளர்தொடரில் உள்ள அறிவிப்பாளர்கள்:

1 . அப்துல்லாஹ் பின் அஹ்மத்

2 . இஸ்ஹாக் பின் இஸ்மாயீல், 3 . அபூகைஸமா,

4 . வகீஃ பின் ஜர்ராஹ்

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64

6 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

7 . ஆஸிம் பின் ளம்ரா

8 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


1 . அப்துல்லாஹ் பின் அஹ்மத்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

3 . வகீஃ பின் ஜர்ராஹ்

4 . ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
5 . இஸ்ராயீல் பின் யூனுஸ்

6 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ

7 . ஆஸிம் பின் ளம்ரா

8 . அலீ பின் அபூதாலிப் (ரலி)


1 . அப்துல்லாஹ் பின் அஹ்மத்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

3 . வகீஃ பின் ஜர்ராஹ்

4 . ஜர்ராஹ் பின் மலீஹ்

5 . ஹபீப் பின் அபூஸாபித்


விரிவான செய்தி பார்க்க: அஹ்மத்-650.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.