கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) கூறினார்:
நாங்கள் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தம் வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள:
முன்சென்று விட்ட எம் தோழர்கள் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலகம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாத நலையில் (சிரமத்துடன் வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைப் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு(ச் செல்வத்தை)ப் பெற்றுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். (அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்.)
மற்றொரு முறை நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது தம் (வீட்டுச்) சுவரைக் கட்டிக்கொண்டிருந்த அவர்கள் ‘ஒரு முஸ்லிம், தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; (தேவைக்கு அதிகமாக வீடுகட்ட) இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர’ என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 75
(புகாரி: 5672)حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ
دَخَلْنَا عَلَى خَبَّابٍ، نَعُودُهُ، وَقَدْ اكْتَوَى سَبْعَ كَيَّاتٍ، فَقَالَ: «إِنَّ أَصْحَابَنَا الَّذِينَ سَلَفُوا مَضَوْا وَلَمْ تَنْقُصْهُمُ الدُّنْيَا، وَإِنَّا أَصَبْنَا مَا لاَ نَجِدُ لَهُ مَوْضِعًا إِلَّا التُّرَابَ، وَلَوْلاَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ» ثُمَّ أَتَيْنَاهُ مَرَّةً أُخْرَى، وَهُوَ يَبْنِي حَائِطًا لَهُ، فَقَالَ: «إِنَّ المُسْلِمَ لَيُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ يُنْفِقُهُ، إِلَّا فِي شَيْءٍ يَجْعَلُهُ فِي هَذَا التُّرَابِ»
Bukhari-Tamil-5672.
Bukhari-TamilMisc-5672.
Bukhari-Shamila-5672.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்
2 . ஆதம் பின் அபூஇயாஸ்
3 . ஷுஅபா
4 . இஸ்மாயீல் பின் அபூகாலித்
5 . கைஸ் பின் அபூஹாஸிம்
6 . கப்பாப் பின் அரத் (ரலி)
இந்தச் செய்தியில் “நபி (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்வதை தடுத்துள்ளார்கள்” என்ற கருத்து மட்டுமே நபியின் சொல்லாகும்.
“ஒரு முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; (தேவைக்கு அதிகமாக வீடுகட்ட) இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர”
என்ற கருத்தை அதிகமானோர் கப்பாப் (ரலி) அவர்களின் சொல்லாகவே அறிவித்துள்ளனர். சிலர் இதை நபியின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர். இதைத் தவறு என்று அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பஸ்ஸார், பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள் பற்றிய விவரம்:
- இஸ்மாயீல் பின் அபூகாலித் அவர்களின் அறிவிப்புகள்:
இஸ்மாயீல் அவர்களிடமிருந்து அறிவித்தவர்களில் நபியின் சொல்லாக கூறியவர்கள்:
1 . அபூமுஆவியா-முஹம்மத் பின் காஸிம்.
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2125, ஷுஅபுல் ஈமான்-10232,
2 . இஸ்மாயீல் பின் முஜாலித்.
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3645,
3 . இஸ்மாயீல் பின் அய்யாஷ்.
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3641,
இஸ்மாயீல் அவர்களிடமிருந்து அறிவித்தவர்களில் இதை நபித்தோழரின் சொல்லாக கூறியவர்கள்:
1 . வகீஃ
பார்க்க: அஹ்மத்-21059,
வகீஃ அவர்களிடமிருந்து அறிவித்தவர்களில் ஒரு முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(மண்ணைத் தவிர) மற்றவற்றுக்கு கூலி வழங்கப்படுவார் என்பதை கூறாமல் அறிவித்தவர்கள்:
1 . யஹ்யா பின் மூஸா
பார்க்க: புகாரி-6430,
2 . இஸ்ஹாக் பின் ராஹவைஹ் (இஸ்ஹாக் பின் இப்ராஹீம்)
பார்க்க: முஸ்லிம்-5205,
3 . யஹ்யா பின் அப்துல்ஹமீத் அல்ஹிம்மானீ
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3637,
(இஸ்மாயீல் அவர்களிடமிருந்து அறிவித்தவர்களில் இதை நபித்தோழரின் சொல்லாக கூறியவர்கள்:)
2 . யஸீத் பின் ஹாரூன், 3 . முஹம்மத் பின் யஸீத்
பார்க்க: அஹ்மத்-21069, 21070, ஹைஸம் பின் குலைப்-1001,
4 . இப்னு உயைனா
பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-154, முஸ்லிம்-5205, ஹைஸம் பின் குலைப்-1002, அல்முஃஜமுல் கபீர்-3633, இப்னு ஹிப்பான்-2999, …
5 . ஷுஅபா
பார்க்க: புகாரி-5672, ஹைஸம் பின் குலைப்-1003, குப்ரா பைஹகீ-6562, ஷுஅபுல் ஈமான்-10231, …
6 . ஸைத் பின் அபூஉனைஸா
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3632,
இஸ்மாயீல் பின் அபூகாலித் அவர்களிடமிருந்து அறிவித்தவர்களில் المسلم يؤجر في كل شيء – என்ற வாக்கியத்தை கூறாமல் அறிவித்தவர்கள்:
1 . யஹ்யா அல்கத்தான்
பார்க்க: அஹ்மத்-21079, 27216, புகாரி-6349, 6350, 6431, நஸாயீ-1823, அல்முஃஜமுல் கபீர்-3634,
2 . யஃலா பின் உபைத்
பார்க்க: தபகாத்துல் குப்ரா-3364,
3 . அப்தா பின் ஸுலைமான்
பார்க்க: புகாரி-7234,
4 . அப்துல்லாஹ் பின் இத்ரீஸ்
பார்க்க: முஸ்லிம்-5205, அல்முஃஜமுல் கபீர்-3636,
5 . ஜரீர், 6 . இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
7 . முஃதமிர், 8 . அபூஉஸாமா
பார்க்க: முஸ்லிம்-5205,
9 . இப்னுல் முபாரக்
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3637,
- அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவித்தவர்கள்:
1 . ஷரீக் பின் அப்துல்லாஹ் அல்காழீ அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: இப்னு மாஜா-4163, திர்மிதீ-2483, அல்முஃஜமுல் கபீர்-3670, 3675,
ஷரீக் அவர்களிடமிருந்து அறிவித்த அஸ்வத் இறுதிப்பகுதியை கூறவில்லை.
அஸ்வத் பின் ஆமிர் —> ஷரீக் பின் அப்துல்லாஹ்
பார்க்க: அஹ்மத்-21054,
அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவித்தவர்களில் இந்தச் செய்தியின் இறுதிப் பகுதியை கூறாமல் அறிவித்தவர்கள்:
1 . மஃமர்
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அல்முஃஜமுல் கபீர்-3668,
2 . ஷுஅபா
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1149, அஹ்மத்-21066, திர்மிதீ-970, அல்முஃஜமுல் கபீர்-3669,
3 . யூனுஸ் பின் இஸ்ஹாக்
பார்க்க: தபகாத்துல் குப்ரா-3363,
4 . இஸ்ராயீல் பின் யூனுஸ்
பார்க்க: அஹ்மத்-21072, அல்முஃஜமுல் கபீர்-3671,
5 . அஃமஷ்
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2135, அல்முஃஜமுல் கபீர்-3672, 3679, ஹாகிம்-5644,
- அலீ பின் யஸீத் என்பவரின் அறிவிப்புகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2121, 2139, அல்முஃஜமுல் கபீர்-3620, … பலவீனம்.
….
(நூல்: ஸஹீஹா-2831)
1 . இந்தக் கருத்தில் கப்பாப் பின் அரத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
…
பார்க்க:
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
https://youtube.com/clip/UgkxzW-huOpYI5Bo8qc2AwqUCbAakroWvxn1?si=XWcuoTFu24pYOPob
இந்த ஹதீஸ் சிறிய ஹதீஸாகவும் வந்துள்ளது வரக்கூடிய காலங்களில் இந்த ஹதீஸை பதிவு செய்யுங்கள்.
மண் சம்பந்தமான இந்த ஹதீஸை ஹப்பாப்(ரலீ) மட்டுமே அறிவிக்கின்றார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ், பதிவு செய்கிறோம்.