தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-344

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அதாஉ பின் அபூரபாஹ் அவர்களிடம், அஃமஷ் (ஸுலைமான் பின் மிஹ்ரான்) அவர்கள் வந்து ஒரு ஹதீஸ் பற்றி கேட்டார். அவருக்கு அந்த ஹதீஸை அதாஉ அவர்கள் அறிவித்தார். உடனே நாங்கள், “அவர் இராக்வாசி ஆயிற்றே! அவருக்கு ஹதீஸை அறிவிக்கிறீர்களே!” என்று அதாஉ அவர்களிடம் கூறினோம்.

அதற்கு அதாஉ அவர்கள், “ஒருவரிடம் (அவர் அறிந்துள்ள) கல்வியைப் பற்றி வினவப்படும் போது, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவர் நெருப்பாலான கடிவாளம் பூட்டப்பட்டவராக கொண்டு வரப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை நான் செவியேற்றுள்ளேன் என்று பதிலளித்தார்.

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை மக்கள் அதிகமான அறிவிப்பாளர்தொடர்களில் பயன்படுத்துகிறார்கள். இது (மக்களுக்கு மத்தியில்) அடிக்கடி பேசப்படும் செய்தியாகும்.

மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் புகாரீ, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைக்குட்பட்டதாகும். என்றாலும் அவர்கள் இதை பதிவு செய்யவில்லை.

இந்தச் செய்தி பற்றி எங்களுடைய ஆசிரியர் அபூஅலீ அவர்களிடம் நான் பேசும் போது, அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர்களில் ஏதாவது சரியாக உள்ளதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார். நான், ஏன் என்று (காரணம்) கேட்க அதற்கவர், அதா அவர்கள் இந்தச் செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நேரடியாக செவியேற்கவில்லை என்று கூறிவிட்டு பின்வரும் ஹதீஸை அறிவித்தார். (பார்க்க: ஹாகிம்-345)

(ஹாகிம்: 344)

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ، إِمْلَاءً بِبَغْدَادَ، ثنا الْقَاسِمُ بْنُ مُحَمَّدِ بْنِ حَمَّادٍ، ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ ثَوْرٍ، ثنا ابْنُ جُرَيْجٍ، قَالَ:

جَاءَ الْأَعْمَشُ إِلَى عَطَاءٍ فَسَأَلَهُ عَنْ حَدِيثٍ فَحَدَّثَهُ، فَقُلْنَا لَهُ تُحَدِّثُ هَذَا وَهُوَ عِرَاقِيٌّ؟ قَالَ: لِأَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ جِيءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَقَدْ أُلْجِمَ بِلِجَامٍ مِنْ نَارٍ»

هَذَا حَدِيثٌ تَدَاوَلَهُ النَّاسُ بِأَسَانِيدَ كَثِيرَةٍ تُجْمَعُ وَيُذَاكَرُ بِهَا، وَهَذَا الْإِسْنَادُ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخَرِّجَاهُ، ذَاكَرْتُ شَيْخِنَا أَبَا عَلِيٍّ الْحَافِظَ بِهَذَا الْبَابِ ثُمَّ سَأَلْتُهُ هَلْ يَصِحُّ شَيْءٌ مِنْ هَذِهِ الْأَسَانِيدِ، عَنْ عَطَاءٍ، فَقَالَ: لَا، قُلْتُ: لِمَ؟ قَالَ: لِأَنَّ عَطَاءً لَمْ يَسْمَعْهُ مِنْ أَبِي هُرَيْرَةَ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-344.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-314.




மேலும் பார்க்க: திர்மிதீ-2649 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.