தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2649

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

கல்வியை (பிறருக்குக் கற்பிக்காமல்) மறைப்பதைக் குறித்து வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரிடம் அவர் அறிந்திருக்கும் அறிவு ஒன்றைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டு அதை அவர் சொல்லாமல் மறைத்தால், மறுமை நாளில் அவருக்கு (நரக) நெருப்பினாலான கடிவாளம் பூட்டப்படும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஜாபிர் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தி “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(திர்மிதி: 2649)

بَابُ مَا جَاءَ فِي كِتْمَانِ العِلْمِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلِ بْنِ قُرَيْشٍ اليَامِيُّ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُمَارَةَ بْنِ زَاذَانَ، عَنْ عَلِيِّ بْنِ الحَكَمِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ عَلِمَهُ ثُمَّ كَتَمَهُ أُلْجِمَ يَوْمَ القِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»

وَفِي البَابِ عَنْ جَابِرٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ»


Tirmidhi-Tamil-2573.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2649.
Tirmidhi-Alamiah-2573.
Tirmidhi-JawamiulKalim-2592.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்.

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் புதைல்.

3 . அப்துல்லாஹ் பின் நுமைர்.

4 . உமாரா பின் ஸாதான்.

5 . அலீ பின் ஹகம்.

6 . அதாஉ பின் அபூரபாஹ்.

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இந்த செய்தி வரும் வேறு அறிவிப்பாளர்தொடரில் அதாஃ அவர்களுக்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு அறியப்படாத மனிதர் கூறப்பட்டுள்ளார்.

(பார்க்க: ஹாகிம்-345)

இந்த ஹதீஸின் தரம் பற்றி தனது ஆசிரியரான அபூஅலீ (ஹுஸைன் பின் அலீ நைஸாபூரி) அவர்களிடம் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் கேட்டபோது (ஹாகிம்-345) இல் உள்ளவாறு அவர் அறிவித்தார். இதில் அதாஃ அவர்களுக்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு அறியப்படாத மனிதர் கூறப்பட்டுள்ளார்.

உடனே ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், அபூஅலீ அவர்களிடம் நீங்கள் கூறும் அறிவிப்பாளர்தொடரில் உள்ள அஸ்ஹர் பின் மர்வானோ அல்லது உங்கள் ஆசிரியரான முஹம்மத் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களோ தவறிழைத்துள்ளார்கள். அவர்கள் தவறிழைப்பது ஒன்றும் அரிதானதல்ல. இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த அபூபக்ர் பின் இஸ்ஹாக், அலீ பின் ஹம்ஷாத் ஆகியோர் அலீ பின் ஹகம் அவர்களுக்கும், அதாஃ அவர்களுக்கும் இடையில் தான், ஒரு அறியப்படாத மனிதரைக் கூறி அறிவித்தனர் என்று கூறினார். அதை அபூஅலீ அவர்களும் ஏற்றுக் கொண்டார்.

இந்த கருத்தில் வரும் பலஅறிவிப்பாளர்தொடர்களை நான் ஒன்றுசேர்த்து பார்த்தபோது தான், பலரும் அதாஃ அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டு அறிவிப்பதாகத்தான் அறிவித்திருந்தார்கள் என்று ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் குறிப்பிட்டுவிட்டு இதன் மூலம், தான் அபூஅலீ அவர்களிடம் கூறியது சரியானது தான் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

(பார்க்க: ஹாகிம்-344345)


  • அலீ பின் ஹகம் அவர்களின் ஹதீஸ்களை ஹம்மாத் பின் ஸலமா நன்கு அறிந்தவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இமாம் கூறியுள்ளார். அவர் அதாஃவிற்கும், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒரு மனிதரைக் கூறாமல் தான் அறிவித்துள்ளார்.

(பார்க்க: அஹ்மத்-7571)

எனவே இந்த செய்தியில் விமர்சனம் இல்லை என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் அலீ பின் ஹகம் அவர்களுக்கும், அதாஃ அவர்களுக்கும் இடையில் அறியப்படாத ஒரு மனிதரை கூறவில்லை என்பதால் ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் கூறிய மற்றொரு அறிவிப்பாளர்தொடர் மூலம் இதில் விமர்சனம் வராது.


  • இந்தச் செய்தியின் பலவகையான அறிவிப்பாளர் தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், அதாஉ பின் அபூரபாஹ் அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (10/ 67)
1872- وَسُئِلَ عَنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أبي هريرة، قال رسول الله صلى الله عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ حَفِظَهُ فَكَتَمَهُ أَلْجِمَ بِلِجَامٍ مِنْ نَارٍ.
فَقَالَ: يَرْوِيهِ عُمَارَةُ بْنُ زَاذَانَ، وَقَدِ اخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ يَحْيَى بْنُ إِسْحَاقَ السَّيْلَحِينِيُّ، عَنْ عُمَارَةَ بْنِ زَاذَانَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَوَهِمَ فِيهِ.
وَإِنَّمَا رَوَاهُ عُمَارَةُ بْنُ زَاذَانَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ.

وَكَذَلِكَ رَوَاهُ مَالِكُ بْنُ دِينَارٍ، وَلَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ، وَسَعِيدُ بْنُ رَاشِدٍ، وَمُعَاوِيَةُ الضَّالُّ، وَالْعَلَاءُ بْنُ خَالِدٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هريرة، عن النبي صلى الله عليه وسلم، وَهُوَ الْمَحْفُوظُ.
وَكَذَلِكَ رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ عَطَاءٍ، وَهُوَ الْمَحْفُوظُ.
واختلف عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ، فَرَفَعَهُ عَنْهُ أَبُو الْأَحْوَصِ.
وَوَقَفَهُ عَنْهُ أَبُو شِهَابٍ عَبْدُ رَبِّهِ بْنِ نَافِعٍ.
وَرَوَاهُ سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ مَرْفُوعًا.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1872)


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7571 , 7943 , 8049 , 8533 , 8638 , 10420 , 10487 , 10597 , இப்னு மாஜா-261 , 266 , அபூதாவூத்-3658 , திர்மிதீ-2649 , இப்னு ஹிப்பான்-95 , அல்முஃஜமுல் அவ்ஸத்-2290 , 3322 , 3529 , 4815 , 7532 , ஹாகிம்-344 , 345 ,

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-264 .

3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-265 .


4 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: ஹாகிம்-346 .

5 . ஜாபிர் (ரலி)

 

 

1 comment on Tirmidhi-2649

  1. அல்ஹம்துலில்லாஹ் நான் இந்த இணையதளத்தில்(Software) பிடித்தவைகளை படித்த ஹதீஸ்களை சேமித்து வைத்துக் கொள்ள favourite கொண்டு வாருங்கள் என்று கேட்டேன் அந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.