அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரிடம் (அவர் அறிந்துள்ள) கல்வியைப் பற்றி வினவப்படும் போது, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவர் நெருப்பாலான கடிவாளம் இடப்படுவார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(இப்னுமாஜா: 264)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ سُلَيْمٍ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أُلْجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»
Ibn-Majah-Tamil-260.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-264.
Ibn-Majah-Alamiah-260.
Ibn-Majah-JawamiulKalim-260.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49459-யூஸுஃப் பின் இப்ராஹீம் அத்தமீமீ என்பவர் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் ஆச்சரியமான-அதிசயமான செய்திகளை அறிவிப்பவர் என்று கூறியுள்ளார். (இதன் பொருள் முன்கரான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்பதாகும்.) - இவ்வாறே அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களும் கூறியுள்ளார். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் அனஸ் (ரலி) அவர்களின் வழியாக அவர்கள் கூறாத செய்திகளை அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/218, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/504, தஹ்தீபுத் தஹ்தீப்-4/452)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-264 ,
சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-2649 .
சமீப விமர்சனங்கள்