தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-265

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய மார்க்கம் தொடர்பான ஒரு கல்வியை ஒருவருக்கு அல்லாஹ் கொடுத்திருக்க, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவருக்கு அல்லாஹ் நெருப்பாலான கடிவாளத்தைப் பூட்டுவான்.

அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரீ (ரலி)

(இப்னுமாஜா: 265)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حِبَّانَ بْنُ وَاقِدٍ الثَّقَفِيُّ أَبُو إِسْحاقَ الْوَاسِطِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَابٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ كَتَمَ عِلْمًا مِمَّا يَنْفَعُ اللَّهُ بِهِ فِي أَمْرِ النَّاسِ أَمْرِ الدِّينِ، أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنَ النَّارِ»


Ibn-Majah-Tamil-261.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-265.
Ibn-Majah-Alamiah-261.
Ibn-Majah-JawamiulKalim-261.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38857-முஹம்மத் பின் தாப் என்பவர் பற்றி, இவர் பொய் கூறும் வழக்கம் உள்ளவர் என்பதால் பலவீனமானவர் என்று அபூஸுர்ஆ அவர்களும், வேறு சிலரும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/250, அல்காஷிஃப்-4/107, தஹ்தீபுத் தஹ்தீப்-3/556, தக்ரீபுத் தஹ்தீப்-1/843)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


3 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-265 ,


சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-2649 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.